ஐயோ!..இவ்ளோ அழகு தாங்காது செல்லம்!.. வைரலாகும் திரிஷாவின் க்யூட் கிளிக்ஸ்....

trisha
20 வருடங்களாக திரையுலகில் நடித்து வருபவர் நடிகை திரிஷா. துவக்கத்தில் துணை நடிகைகளில் ஒருவராக சில படங்களில் நடித்தார். அதன்பின் லேசா லேசா படம் மூலம் கதாநாயாகியாக மாறினார்.
நயன்தாரா தமிழ் சினிமாவில் அறிமுகவாதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே நடிக்க துவங்கியவர் திரிஷா. ஒருகட்டத்தில் முன்னணி நடிகையாக மாறினார்.
விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். ஆனால், இவருக்கு போட்டியாக வந்த நயன்தாரா மார்க்கெட்டை பிடித்துவிட்டதோடு பல புதிய நடிகைகளும் வந்துவிட திரிஷாவுக்கு வாய்ப்புகள் குறைந்து போனது.
இதையும் படிங்க: நகைகளை திருட வைத்ததே ஐஸ்வர்யாதான்!.. வேலைக்காரி கொடுத்த பகீர் வாக்குமூலம்!..
ஒருபக்கம் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வந்தார். கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்புவுடன் நடித்த ‘விண்ணை தாண்டி வருவாயா’ திரைப்படத்தின் வெற்றி திரிஷாவுக்கு மீண்டும் வாய்ப்புகளை பெற்று கொடுத்தது.
மணிரத்னத்தின் இயக்கத்தில் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படமும் பெரிய வெற்றி பெற்றது. விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் புரமோஷன் வேலையில் படக்குழு ஈடுபட்டுள்ளது. மேலும், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த விழாவில் திரிஷா கலந்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

trisha