’வழிய போய் கிணத்துக்குள்ள விழுந்த கதையா’ திரிஷாவின் நிலைமை...! செல்லத்துக்கு வந்த சோதனை...
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. கிட்டத்தட்ட அனைத்து முன்னனி நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருபவர். ஆரம்பத்தில் துணை நடிகையாக சிம்ரனுக்கு தோழியாக ஜோடி என்ற படத்தில் அறிமுகமானார்.
அதன் பின் படிபடியாக வளர்ந்து முன்னனி அந்தஸ்தை பெற்றுள்ளார். ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். சமீப காலமாக இவரது படம் வராததால் ரசிகர்களிடையே வரவேற்பை இழந்துள்ளார். சமூக வலைதளங்களிலும் இவரை பார்க்க முடிவதில்லை.
இந்த நிலையில் திடீரென அரசியலில் ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் இருந்து குஷ்பு பிஜேபிக்கு தாவியதால் அந்த இடம் தற்பொழுது காலியாக உள்ளது. அந்த இடத்தை நிரப்புவதற்காக திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தெரிகிறது.
ஆனால் திரிஷாவின் தரப்பில் இருந்து எந்தவொரு அறிவிப்பும் இதுவரை வரவில்லை. எனினும் சினிமாவில் அவரது மார்க்கெட் குறைந்து வருவதாலும் படவாய்ப்புகள் இல்லாததாலும் அரசியல் ஆர்வம் எட்டிப் பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.