96 ஜானுவாக மாறிய விஜய் டிவி பிரியங்கா.... ஒரிஜினல் ஜானு என்ன கூறியுள்ளார் தெரியுமா?
விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளியாக வலம் வருபவர் தான் பிரியங்கா. இவர் சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்று இரண்டாவது இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிரியங்கா தற்போது மீண்டும் சேனலில் தொகுத்து வழங்க தொடங்கி உள்ளார்.
பிரியங்கா விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஸாட்ரட் மியூசிக் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றதால் அவருக்கு பதில் மாகாப அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். தற்போது பிரியங்கா மீண்டும் வந்துவிட்டதால், மீண்டும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சிக்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.
பிரியங்கா வந்த உடன் தான் செட்டே களைகட்டி உள்ளதாக பலரும் கமெண்ட் அடித்து வருகிறார்கள். இந்நிலையில் பிரியங்காவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி பிரியங்கா 96 படத்தில் த்ரிஷாவின் ஜானு கெட்டப்பில் உடையணிந்து ஜானு என்ற கேப்ஷனோடு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதனை கண்ட 96 படத்தின் ரியல் ஜானுவான நடிகை திரிஷா, "ஹாஹாஹா லவ்" என்று கமெண்ட் செய்துள்ளார். அதற்கு உடனே பிரியங்கா மன்னிச்சிடுங்க என்று பதில் கமென்ட் போட்டுள்ளார். தற்போது பிரியங்காவின் இந்த புகைப்படமும், அவர்களின் கமெண்ட்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க மற்றொரு புறம் ரசிகர்கள் பலர் பிரியங்காவை கலாய்த்தும் மீம்கள் வெளியிட்டும் வருகிறார்கள். தன்னை பற்றி எவ்வளவு நெகடிவ் கமெண்ட்கள் வந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் பாசிடிவாக பேசுவதால் தான் தற்போது பிரியங்காவை யாராலும் ரீப்ளேஸ் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.