
Cinema News
சொந்தமாக முடிவெடுக்க தயங்கும் த்ரிஷா… பின்னணியில் இயக்குவது அவர்தானாம்??
தமிழின் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷா, “ஜோடி” திரைப்படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்தார். அவர் நடித்த முதல் திரைப்படம் அதுதான். அதன் பின் “மௌனம் பேசியதே” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான த்ரிஷா, தனது முதல் திரைப்படத்திலேயே கியூட்டான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திழுத்தார்.
இதனை தொடர்ந்து த்ரிஷா “மனசெல்லாம்”, “சாமி”, “லேசா லேசா” போன்ற திரைப்படங்களில் நடித்து கனவுக்கன்னியாக திகழ்ந்தார். எங்கு திரும்பினாலும் த்ரிஷாவின் அழகில் மயங்கி கிடந்தார்கள். அந்த அளவுக்கு ஒரு மோக அலையையே வீசிச்சென்றார் த்ரிஷா.
த்ரிஷா நடிக்க வந்து கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேல் ஆகிறது. ஆனால் இன்று வரை ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தையே தன் கைக்குள் வைத்திருக்கிறார். சமீபத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் குந்தவையாக வந்து நம் மனதை கொள்ளைக்கொண்டுப்போனார்.
இளையராணியாகவே மாறிப்போன த்ரிஷாவின் அழகைப் பார்த்து பலரும் சொக்கித்தான் போனார்கள். 20 வருடங்களாக ஒரு நடிகை தனது ரசிகர்களை எங்கும் தாவவிடாமல் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் என்றால் அது மிகவும் ஆச்சரியத்தக்க விஷயமே.
இந்த நிலையில் த்ரிஷா குறித்த ஒரு அதிர்ச்சியான தகவலை சமீபத்தில் ஒரு பேட்டியில் மூத்த பத்திரிக்கையாளர் அந்தணன் பகிர்ந்துகொண்டார். அதாவது த்ரிஷா திரைப்படங்களில் நடிப்பது தொடர்பாக சொந்தமாக முடிவெடுப்பதே இல்லையாம். எந்த விஷயம் என்றாலும் அவரது அம்மாவையே எதிர்பார்க்கிறாராம். ஒரு இயக்குனர் கதை சொல்ல வந்தால் கூட த்ரிஷாவின் அம்மாவிடமும் கதை சொல்ல வேண்டியிருக்கிறதாம்.
நடிகைகள் ஆரம்ப காலத்தில் தனது அம்மாக்களிடம் அனுமதி பெற்றுக்கொண்டு திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்துகொள்வது என்பது வழக்கம்தான். ஆனால் 20 வருடங்களாக டாப் நடிகையாக கோலோச்சிக்கொண்டிருக்கும் த்ரிஷா, இப்போதும் தனது அம்மாவிடம் அனுமதி கேட்டுத்தான் நடிக்கிறார் என்பது ஆச்சரியமான ஒன்றாக இருக்கிறது.