Vijay Trisha: வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தில் த்ரிஷா ஒரு குத்துப்பாடல் ஆடப் போவதாக நேற்றில் இருந்து ஒரு தகவல் வைரலாகி வருகின்றது. என்னது த்ரிஷாவா? அதுவும் குத்துப்பாடலா? என ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்திருக்கின்றனர். ஏனெனில் த்ரிஷா கெரியரில் குத்துப்பாடல் என்பதற்கு வாய்ப்பே இல்லை. கில்லி படத்தில் அப்படிப்போடு போடு என்ற பாடல்தான் அதிகபட்சமாக த்ரிஷா ஆடிய குத்துப்பாடலாகும்.
கோட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா நடிக்க கூடவே லைலாவும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களுடன் பிரபுதேவா , பிரசாந்த் மற்றும் யோகிபாபு போன்றோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அஜித்தின் அடுத்த பட டைட்டில் இதுதானா? புதுசா இருக்கு தல இதெல்லாம்…
இந்த நிலையில்தான் த்ரிஷா இந்தப் படத்தில் ஒரு குத்துப்பாடல் ஆடப் போவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. அதுவும் இந்தப் பாடலை காவாலா பாடலை விட மிகவும் ஹிட்டாக்க வேண்டும் என்ற முனைப்பில் யுவன் சங்கர் ராஜா இருக்கிறாராம். அந்தளவுக்கு இந்தப் பாடல் ஒரு சரியான குத்துப்பாடலாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று சொல்லப்படுகிறது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் ஷாரூக்கான் நடித்த ஜவான் படத்திலேயே த்ரிஷாவை ஒரு பாடலுக்கு ஆட அட்லீ அழைத்தாராம். ஆனால் அப்போ முடியாது என சொன்ன த்ரிஷா கோட் படத்தில் மட்டும் ஓகே சொல்லியிருப்பது ரசிகர்களுக்கு சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. அதுவும் இந்தப் பாடலை குண்டூர்காரன் பட டான்ஸ் மாஸ்டர் சேகர்தான் இந்தப் படத்திற்கு நடனம் அமைக்க இருக்கிறாராம். அப்போ பாடல் வேற லெவலில் இருக்கும் என சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: இதுதான் கேப்புல கெடா வெட்றதா?!. சிவாஜி படத்தில் தன்னை பற்றி பாடல்களை எழுதிய கண்ணதாசன்!..
தமிழ்த்திரை உலகில் புரட்சித்தலைவர் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்படுபவர் எம்ஜிஆர். அவரது படங்களின் வசனங்கள், பாடல்களில் இதைக் கண்கூடாகக் காணலாம்.…
தென்னிந்திய சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் தனி செல்வாக்கை பெற்றவர் நடிகை மஞ்சு வாரியர். எந்த விழாவிற்கு வந்தாலும் தனது…
தமிழ் திரையுலகில் 90களில் இறுதி முதல் 2002ம் ஆண்டு வரை முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். கமல், விஜயகாந்த்,…
தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…
மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…
வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…