உங்கள் நம்பிக்கிட்டு இருந்தா என் பொழப்பு என்னாகுறது? த்ரிஷா செஞ்ச வேலையால் கடுப்பான ‘விடாமுயற்சி’டீம்
கோலிவுட்டில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக கோலோச்சி வரும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை த்ரிஷா. அதுவும் ஹீரோயினாக இத்தனை வருடங்கள் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு வருகிறார். மேலும் இத்தனை வருடங்களாயினும் அவர் அழகில் கொஞ்சம் கூட துளி அளவு மாற்றம் தெரியவில்லை.
அந்த அளவுக்கு மிக இளமையாகவே காணப்படுகிறார் த்ரிஷா. சமீபத்தில் லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அந்தப் படம் அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்கு முன் குந்தவை பிராட்டியாக பொன்னியின் செல்வனில் கூடுதல் அழகுடன் ரசிகர்களை வசியப்படுத்தினார்.
ஆனால் சினிமாவில் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு த்ரிஷா தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை கையில் எடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் அஜித்திற்கு ஜோடியாக விடாமுயற்சியிலும் ஒப்பந்தமாகியிருந்தாராம் த்ரிஷா.
இதையும் படிங்க : ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா எங்க நடக்கப் போகுதுனு தெரியுமா? அட இத யோசிக்கவே இல்லையே?
ஆனால் அது வெறும் பேச்சாகவே இருந்திருக்கிறது. எந்த ஒரு அக்ரிமெண்ட்டும் இல்லாமல் தான் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. ஏற்கெனவே பிப்ரவரியில் ஆரம்பமாக வேண்டிய விடாமுயற்சியின் படப்பிடிப்பு ஜூலை மாதம் ஆரம்பித்தும் இன்னும் படப்பிடிப்பில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த த்ரிஷா இந்தப் படத்தையே நம்பிக் கொண்டிருந்தால் அப்படியே உட்கார்ந்து கிடக்க வேண்டியது தான் என்று எண்ணி ஐசரி வேல் புரடக்ஷனில் கௌரவ குமார் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியிருக்கிறாராம்.
அந்தப் படத்திற்காக ஒரு பல்க்கான கால்ஷீட்டுகளை கொடுத்துவிட்டாராம் த்ரிஷா. அதுமட்டுமில்லாமல் எந்த ஒரு அட்வான்ஸ் தொகையும் கொடுக்காமல் தான் விடாமுயற்சிக்காக த்ரிஷாவை இதுவரை அணுகியிருக்கிறார்கள். அதனால் அம்மணி அவர் வேலையை பார்க்க சென்று விட்டார். விடாமுயற்சியில் அஜித்துக்கு ஜோடியை தேட இன்னும் மாதக்கணக்கில் இழுத்தடிக்க போகிறார்கள் என்பது நல்லாவே தெரிகிறது.
இதையும் படிங்க :போதை ஊசி போட்டாரா? படம் தோல்விக்கு கார்த்திக்கின் இந்தப் பிரச்சினைதான் காரணமா?