Trisha: இருந்த ஒரு பட்டத்தையும் கொடுத்தாச்சு.. திரிஷாவால் நெருக்கடிக்கு ஆளான நயன்தாரா

by Rohini |   ( Updated:2025-04-12 02:10:04  )
trishanayan
X

trishanayan

Trisha: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் நயன்தாரா மற்றும் திரிஷா. இருவருக்குமே சினிமாவில் ஒரு தனி மார்கெட் இருந்து வருகிறது. திரிஷா ஆரம்பத்தில் ஒரு துணை நடிகையாக இருந்து அதன் பின் ஹீரோயினாக அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்தார். இவர் நடித்து வெளியான பெரும்பாலான படங்கள் வெற்றிப்படங்களாகவே அமைந்திருக்கின்றன.

சொல்லப்போனால் சிம்ரன் , ஜோதிகா இவர்களுக்கு பிறகு டாப் இடத்தில் இருந்தவர் திரிஷாதான். இவருக்கு பிறகுதான் நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வந்தார். அஜித் ,விஜய், சூர்யா என மற்ற மொழிகளிலும் நடித்து லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்திற்கு சொந்தமானார். இதற்கிடையில் பெண்களை மையப்படுத்தி அமையும் கதாபாத்திரங்களிலும் நடித்து ரஜினி,விஜய் இவர்களுக்கு இணையான புகழை சம்பாதித்தார்.

அதிலிருந்து தமிழ் சினிமாவில் யாரும் அசைக்க முடியாத ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டார் நயன். நயன்தாரா அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுக்க இந்தப் பக்கம் திரிஷாவின் மார்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கியது. திரிஷா இனிமேல் சினிமாவில் நிலைக்க முடியாது என்ற சூழ்நிலை வந்த நிலையில் பொன்னியின் செல்வன் இவருக்கு கைக் கொடுத்தது.

ஒரு அழகு பதுமையாக குந்தவையாக மக்கள் மனத்தில் ஒரு மகாராணி போல் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டார் திரிஷா. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு தான் திரிஷாவின் செகண்ட் இன்னிங்க்ஸ் ஆரம்பமானது. மீண்டும் தனது ஆரம்ப ரூட்டை கையில் எடுத்தார். விஜய், அஜித் , கமல் , சூர்யா என மீண்டும் அவர்களுக்கு ஜோடியாக நடிக்க தொடங்கினார்.

லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாகவும் நடித்தார். இப்போது குட் பேட் அக்லி படத்திலும் மீண்டும் அஜித்துக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் திரிஷா. சூர்யாவுடனும் இப்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் திரிஷா குறித்து ஒரு பதிவு வைரலானது. தென்னிந்தியாவின் குயின் திரிஷா என்றும் அடுத்தடுத்து பேக் டூ பேக் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் திரிஷா. ஆனால் நயன் அதற்கு நேர் மாறாக தொல்வி படங்களையே கொடுத்துவருகிறார். இதனால் ஒட்டுமொத்த சினிமாவும் திரிஷாவின் பக்கம் திரும்பியிருக்கிறது.உண்மையிலேயே தென்னிந்திய சினிமாவின் குயின் இப்போது திரிஷாதான் என்று கூறி வருகிறார்கள்.

Next Story