‘கில்லி’ படத்திலிருந்து அந்த பழக்கத்தை கடைப்பிடிக்கும் திரிஷா!.. கை கொடுக்கும் தோழனாக இருந்த விஜய்..

by Rohini |
vijay
X

vijay trisha

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் கிட்டத்தட்ட 20 வருடங்களாக ஹீரோயினாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகிறார்.சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் ஒரு படி மேலாக புகழின் உச்சிக்கே இழுத்துச் சென்றது.

vijay1

vijay trisha

இந்த ஒரு கம்பேக் அவரது வாழ்க்கையையே புரட்டிப் போட்டிருக்கிறது. அடுத்து அவர் விஜயுடன் தளபதி - 67 படத்தில் ஜோடியாக களமிறங்குகிறார். ஏற்கெனவே ஆரம்பகாலங்களில் விஜய் அஜித் நாயகியாக வலம் வந்த திரிஷா கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு விஜயுடன் மீண்டும் இணைகிறார். அதனால் இந்த படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க : சிவாஜி 7 வேடங்களில் கலக்கிய படம்.. இது யாருக்காவது தெரியுமா?..

அதன் மூலம் பேன் இந்தியா நாயகியாக மாறிவிட்டார். சமீபத்தில் வெளியான ராங்கி திரைப்படமும் ஓரளவு வரவேற்பை பெற்றது. பெண்களை மையப்படுத்தி அமைந்திருக்கும் ராங்கி திரைப்படத்தில் இதுவரை பார்க்காத திரிஷாவை அந்த படத்தில் பார்த்திருப்போம்.

vijay2

vijay trisha

ராங்கி படத்தில் கொஞ்சம் ஸ்டண்ட் காட்சிகளில் திரிஷா கலக்கியிருப்பார். அதை பற்றி ஒரு பேட்டியில் கூறிய போது கில்லி படத்தை பற்றி நினைவுகூர்ந்தார் திரிஷா.அந்த படத்தில் விஜயுடன் சேர்ந்து பல காட்சிகளில் ஏறி ஏறி குதிப்பது என்பது மாதிரியான காட்சிகள் அதிக அளவு இடம்பெற்றிருக்கும்.

அப்போது ரோப்களை பயன்படுத்தி நடித்தாராம். அதன் மூலம் ரோப் பயன்படுத்தி நடிப்பது என்பது எனக்கு எளிதாகி விட்டது. அது கில்லி படத்தில் இருந்து எனக்கு பழகி விட்டது. அதுவும் நிறைய காட்சிகளில் விஜயை ஃபாலோ பண்ணியே நானும் குதிச்சிருப்பேன். அந்த ஒரு அனுபவம் தான் இந்த ராங்கி படத்திற்கு எனக்கு எளிதாக இருந்தது என்று கூறினார் திரிஷா.

vijay3

trisha

Next Story