விஜயை ‘வாடா போடா’ என அழைக்க தயங்கிய திரிஷா!.. ஒரு பிளாஷ்பேக்!..

Published on: June 29, 2024
vijay trisha
---Advertisement---

தமிழ் சினிமாவில் சில நடிகைகள் மட்டுமே சில நடிகர்களுக்கு சரியாக செட் ஆவார்கள். அதாவது அவர்களின் ஜோடி பொருத்தம் மிகவும் நன்றாக இருக்கும். இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி சரியா ஒர்க் அவுட் ஆகும். அது ரசிகர்களுக்கும் பிடித்துப்போகும். இது அந்த காலத்திலிருந்து இருந்து வருகிறது.

இதில் சில ஜோடிகள் திருமணத்திலும் முடியும். ஜெமினி – சாவித்ரி, எஸ்.எஸ்.ஆர் – விஜயகுமாரி, நாகார்ஜுனா – அமலா, சூர்யா – ஜோதிகா என சொல்லிக்கொண்டே போகலாம். விஜய் பல நடிகைகளுடன் நடித்திருந்தாலும் திரிஷாவுக்கும் அவருக்குமான கெமிஸ்ட்ரி திரையில் பார்ப்பதற்கு நன்றாகவே இருக்கும்.

vijay trisha

இருவரும் தரணி இயக்கிய கில்லி படத்தில்தான் முதன் முதலில் இணைந்து நடித்தார்கள். அந்த படத்தில் இருவருக்கும் ஜோடி பொருத்தம் சிறப்பாக இருந்தது. இருவரும் சேர்ந்து ஆடிய ‘அப்படிப் போடு போடு’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படம் சமீபத்தில் ரீமேக் செய்யப்பட்டு 20 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதன்பின் திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். லியோ படத்தில் விஜய்க்கு லிப் லாக் கொடுக்கும் காட்சியிலும் திரிஷா நடித்திருந்தார் விஜய். சொந்த வாழ்விலும் விஜய் – திரிஷா இடையேயான உறவு அடிக்கடி விமர்சனத்திற்கும் உள்ளாவது உண்டு.

trisha

இப்போது விஜயின் அலுவலகம் இருக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பில்தான் திரிஷாவும் வீடு வாங்கி குடியேறி இருக்கிறார். லிப்ட்டில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து சமீபத்தில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் சொன்னார் திரிஷா. இருவரும் அடிக்கடி வெளிநாட்டில் ஜாலியாக சுற்றும் புகைப்படங்களும் இதற்கு முன் வெளியானது.

இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய திருப்பாச்சி பட இயக்குனர் பேரரசு ‘திருப்பாச்சி படத்தி ஒரு காட்சியில் விஜயை வாடா போடா என கூப்பிடுவது போல நடிக்க வேண்டும். ஆனால், விஜயை அப்படி பேச திரிஷா தயங்கினார். ஆனால், அப்படி பேசினால்தான் இந்த காட்சி சரியாக வரும் என விஜயே அவரிடம் சொல்லி சம்மதிக்க வைத்தார்’ என சொல்லியிருந்தார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.