திரிஷாவுக்கு திடீர் கல்யாணமா? சொல்லாம கொள்ளாம இப்படி போட்டு இருக்கீங்களே!

by Akhilan |   ( Updated:2025-03-30 05:13:51  )
திரிஷாவுக்கு திடீர் கல்யாணமா? சொல்லாம கொள்ளாம இப்படி போட்டு இருக்கீங்களே!
X

trisha

Trisha: திரிஷா தன்னுடைய இரண்டாவது இன்னிங்கிஸில் பிஸியாக வலம் வந்துக்கொண்டு இருக்கும் நிலையில் அவருடைய இன்ஸ்டா பதிவு தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நடிகையாக வருவதற்கு முன்னர் மாடலாக இருந்தவர் திரிஷா. அப்படி இருந்த நிலையில் நடிப்பில் களமிறங்க அவருக்கு வந்த சாதாரண ரோல் ஒன்றுதான் லேசா லேசா. ஆனால் அப்போது அப்படத்தில் வேறு ஹீரோயின் ஒப்பந்தமானார்.

அவர் ஷூட்டிங் அன்று வராமல் போக அவருக்கு பதில் திரிஷா ஒப்பந்தமாகினார். அதை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. தொடர்ச்சியாக நடித்தும் வந்தார். சின்ன ரோலில் தொடங்கிய அவர் பயணம் அதன் பின் முன்னணி ஹீரோகளுடன் ஜோடி போட்டார்.

#image_title

ஒருகட்டத்தில் அவருக்கு பிரபல நடிகர் ராணா டகுபதியுடன் காதல் எனக் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் தெலுங்கில் பெரிய குடும்பமான ராணா தரப்பு இவர்கள் தரப்பு அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. அதை தொடர்ந்து தெலுங்கில் வளர முடியாமல் போனார் திரிஷா.

தொடர்ந்து பிரபல தொழிலதிபர் வருண் மணியனுடன் நிச்சயம் நடந்த சில மாதங்களில் அந்த திருமணத்தை அதிகாரப்பூர்வமாக நிறுத்தினர். ஆனால் அதுகுறித்து எந்த காரணமும் வெளியாகவும் இல்லை. ஆனால் இதனால் திரிஷாவின் மார்க்கெட் பெரிய அடி வாங்கியது.

அதன் பின் அவர் நடித்த படங்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. மார்க்கெட்டும் போனது. இந்த நேரத்தில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. தன்னுடைய முக்கிய நடிப்பால் அசத்தினார்.

மீண்டும் இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கி விஜய், அஜித், கமல்ஹாசன் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 41 வயதாகும் திரிஷா தற்போது காதல் எப்போதுமே ஜெயிக்கும் என பட்டுப்புடவையில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த சிலர் திருமணம் செய்துக்கொள்ள போகிறாரோ எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Next Story