Cinema News
திரிஷா என் தோழிலாம் இல்லை… பேட்டியில் அடாவடியாக பேசிய நயன்தாரா… வைரலாகும் வீடியோ!
Nayanthara: நடிகை நயன்தாரா தன்னுடைய ஆரம்ப காலத்தில் இருந்தே பெரிய அளவில் நடிகைகளிடம் நட்பு பாராட்டியது இல்லை. பல இடங்களில் அவர் தன்னுடைய சக நடிகைகள் குறித்து ஓப்பனாக பேசும் சில விஷயங்கள் வைரலாகி இருக்கிறது.
நயன்தாராவின் ஆரம்பகாலம்
தமிழ் சினிமாவில் ஐயா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நயன்தாரா. அப்படம் நல்ல வெற்றியை பெற்றாலும் சிம்புவின் வல்லவன் திரைப்படம் தான் நயன்தாராவின் திரை வாழ்க்கையில் முக்கிய படமாக அமைந்தது. ஆனால் அப்படத்தில் இருவருக்கும் காதல் பத்தி கொண்டது.
சிம்பு மற்றும் நயன்தாரா இடையேயான விவகாரமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகியது. இதைதொடர்ந்து இருவரும் தங்களுடைய உறவை முடித்துக் கொண்டனர். அடுத்து நயன்தாரா இயக்குனர் மற்றும் நடிகருமான பிரபுதேவா உடன் காதலில் விழுந்தார்.
திருமணம் வரை சென்ற இவர்கள் உறவு திடீரென முடிந்தது. அதைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா சினிமாவில் சற்று பிரேக் எடுத்து மீண்டும் நடிக்க வந்தார். தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக உள்ளே வந்தவர் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்து அசத்தினார்.
நயன் அடாவடி
அங்குதான் அவருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் ஏற்பட்டது. வெளியில் எதுவும் சொல்லாமல் இருவரும் தங்களுடைய காதலை பொறுமையாக வளர்த்து வந்தனர். ஒரு கட்டத்தில் நெருங்கிய வட்டாரத்தில் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.
தங்களுடைய திருமணத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பெரிய தொகைக்கு விற்பனை செய்தனர். இந்த விவகாரத்தில் நடிகர் தனுஷை கடுமையாக சாடி கடிதம் வெளியிட்டார். இதில் பிரபலங்கள் பலரும் ஆதரவு கொடுத்தாலும் ரசிகர்கள் தனுஷ் பக்கம் தான் நின்றனர். இதில் நயன்தாராவின் அணுகுமுறை கேள்வி எழுப்பப்பட்டது.
இந்நிலையில் பழைய பேட்டி ஒன்றில் நடிகை நயன்தாராவிடம் திரிஷா மற்றும் ஸ்ரேயாவுடனான நட்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நயன், அவங்க என் பிரண்ட்ஸ் எல்லாம் இல்லை. அவங்களுக்கு அந்த வார்த்தை பெரிசு.
பெண்ணுக்கும் பெண்ணுக்கும் ஆகாது என்பது போல எனக்கு அவங்களுக்கும் செட்டாகலை. அப்பையும் இப்பையும் எனக்கு எதுவும் இல்லை. நான் போய் அவங்களிடம் பேசி சமாதானம் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பழைய வீடியோவைக் காண: https://www.instagram.com/reel/DCpA1dWBZJg/?igsh=d2piaGRvZm05MGVs