ப்ளீஸ்… இப்படி ஒரு தப்பான தகவலை பரப்பாதீங்க… கடுப்பான திரிஷா.!

Published on: August 20, 2022
trisha
---Advertisement---

தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக நடித்து கலக்கி வருபவர் நடிகை திரிஷா. இவர் தற்போது மனிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிஉள்ள பொன்னியின் செல்வன் படத்திலும் குந்தவை தேவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

trisha

திரிஷாவுக்கு ஆரம்ப காலகட்டத்தை போல பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தற்போது பெண்களுக்கு  ஏற்ற முக்கியமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  தளபதி 67 படத்திலும் கூட அவர் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் பரவியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்களேன்- மேடையில் அந்த விஷயத்தை தைரியமாக ஒத்துக்கொண்ட மணிரத்னம்.! பொன்னியின் செல்வன் சூப்பர் சீக்ரெட்.!

trisha

இந்த நிலையில், நடிகை திரிஷா விரைவில் ஒரு பிரபல கட்சியில் இணையளவுள்ளார் என்றும் நடிப்பை  நிறுத்திவிட்டு அரசியலில் களமிறங்கவுள்ளார் என செய்திகள் பரவியது. வழக்கம் போல இதுவும் வெறும் வதந்தி தகவல் தானம்.

trisha

திரிஷா அரசியலில் வரும் செய்தியை முழுவதுமாக அவரது தாயார் முற்றிலுமாக மறுத்துள்ளார். அப்படி ஒரு திட்டமும் கூட எங்களுக்கு இல்லை என்றும், திரிஷா அரசியலில் வரும் செய்தி பரவுவது வெறும் வதந்தி தகவல் தான் என்று விளக்கம் அளித்துள்ளார்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.