அந்த நடிகர் கொடுத்த முத்தத்தில் மயங்கி நின்ற திரிஷா.. சீக்ரெட்டை லீக் செய்த பயில்வான் ரங்கநாதன்!...
Trisha: சமீபத்தில் நடந்த லியோ சக்ஸஸ் மீட்டில் விஜய் சொன்னது போல 20 வருஷமாக தன்னுடைய ஆளுமையை செலுத்தி வருகிறார் நடிகை த்ரிஷா. அவர் மீது ஏகப்பட்ட கிசுகிசுக்கள் இணையத்தில் வலம் வந்தாலும் தற்போது பயில்வான் ரங்கநாதன் கொளுத்தி போட்டு இருக்கும் விஷயம் தீயாக பரவி வருகிறது.
கோலிவுட்டில் த்ரிஷா கால் பதித்த காலத்தில் அசினுக்கு போட்டி நாயகியாக மாறி போனார். அவர் கேரியர் முடிந்து வெளியில் போய்விட்டார். தொடர்ச்சியாக எதிரில் நடிகைகள் மாறிக்கொண்டே போனாலும் த்ரிஷா இன்றும் அதே இளமையுடன் நிலை நிற்கிறார்.
இதையும் வாசிங்க:கால்ஷீட் கொடுத்தவரையே கலாய்த்த மிஷ்கின்… வாய அடக்கி பேசுங்க டைரக்டர் சார்!..
த்ரிஷா எல்லாவகையான கதாபாத்திரத்திலும் ஈசியாக பொருந்தி போவார். அதிலும் அவரின் சில கதாபாத்திரங்கள் நிஜமாகவே ரசிகர்கள் மனதில் பதிந்து விடும். அப்படி ஒரு கதாபாத்திரம் தான் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் ஜெஸ்ஸி.
கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான அப்படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்து இருந்தார். ஜோடியாக த்ரிஷா, ஜெஸ்ஸியாக நடித்து அசத்தி இருந்தார். இப்படத்தில் இருவருக்குமே நெருக்கமான காட்சிகள் நிறைய இடம் பெற்று இருந்ததாம்.
இதையும் வாசிங்க:சந்திரமுகி 2-வை அடுத்து லால்சலாம்!.. கடும் அப்செட்டில் ஐஸ்வர்யா.. என்ன நடந்துச்சி தெரியுமா?...
அப்போது ஒரு காட்சியில் த்ரிஷாவுக்கு சிம்பு முத்தம் கொடுப்பது போல அமைக்கப்பட்டு இருந்த ஒரு காட்சியின் ஷூட்டிங் முடிந்து கௌதம் மேனன் கட் சொல்லிக்கூட சிம்பு தொடர்ந்து த்ரிஷாவை முத்தம் கொடுத்தப்படியே இருந்தாராம். த்ரிஷாவும் அதை தவிர்க்காமல் நின்றாராம்.
இந்த தகவலை தற்போது பிரபல திரை விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய பேட்டியில் கசிய விட்டு இருக்கிறார். அவரின் இந்த வீடியோவுக்கு சிம்பு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். பழைய கதையை ஏன் மீண்டும் கொளுத்துறீங்க. சிம்பு மற்றும் த்ரிஷா இருவருமே ரொம்ப நாளுக்கு பிறகு வரிசையாக ஹிட் கொடுத்து வருகின்றனர். இப்போ இதை பேசணுமா என்ற ரீதியில் அவரை திட்டி வருகின்றனர்.