
Cinema News
தவிக்கவிட்ட திரிஷா…மீண்டும் மாட்டிக்கொண்டார்…! விடுவாரா சிம்பு…?
இயக்குனர் கௌதம் மேனன் சிம்புவை வைத்து அண்மையில் படப்பிடிப்பை முடித்த படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. இன்னும் படத்தின் டிரெய்லரே வராத நிலையில் இந்த படத்தில் பாடல் அமோக வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த கையோடு விண்ணை தாண்டி வருவாயா படத்தின் பாகம் 2ஐ எடுக்கப் போவதாக கௌதம் மேனன் தெரிவித்திருந்தார். இந்த படத்திலும் திரிஷாவே ஹீரோயினாக நடிக்க இருப்பதாக உறுதியானது. மேலும் சிம்பு பல படங்களில் கமிட் ஆகி இருப்பதால் கௌதம் மேனன் ஏற்கெனவே திரிஷா விஜய்சேதுபதி இணைந்து நடித்த 96 படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி அனைவரையும் ரசிக்க வைத்தது. அதனால் இந்த படத்தில் திரிஷாவுக்கு ஜோடியாக விஜய் சேதுபதியிடம் நடிக்க கேட்டார்.
ஆனால் விஜய் சேதுபதி விண்ணை தாண்டி வருவாயா படத்தில் சிம்பு நடித்தால் தான் நல்லா இருக்கும், நான் நடித்தால் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று கூறிவிட்டாராம். உடனே மீண்டும் சிம்புவிடம் கேட்கப்பட்டது. அவரும் சரி என்று சொல்ல படம் ஓகே ஆனது. விரைவில் படத்திற்கான படப்பிடிப்பும் ஆரம்பமாகும் என கௌதம் மேனன் தரப்பில் கூறப்பட்டது.
இதற்கிடையில் இதை கேள்வி பட்டு ரசிகர்களின் வருத்தம் என்ன என்றால் 96 படத்திலும் திரிஷா விஜய் சேதுபதியை தனியாக தவிக்க விட்டு போய் விடுவார், விண்ணைத் தாண்டி வருவாயா படத்திலும் சிம்புவை தனியாக விட்டுட்டு போய் விடுவார், இந்த படத்துலயாவது சேர்த்து வையுங்கள் என ரசிகர்கள் கூறிவருகின்றனர். ஆனால் என்ன ட்விஸ்ட் வைக்கப் போகிறாரோ கௌதம் மேனன் ? காத்திருந்து பார்க்கலாம்.