Connect with us

தளபதி-67க்காக நடிகை திரிஷாவின் தில்லாலங்கடி வேலை…! விஜய் அப்படி பட்டவரே கிடையாதே…

vijay_main_cine

Cinema News

தளபதி-67க்காக நடிகை திரிஷாவின் தில்லாலங்கடி வேலை…! விஜய் அப்படி பட்டவரே கிடையாதே…

நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க படத்தின் முதல் சிங்கிளை தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர். மேலும் படத்தை பொங்கல் அன்று ரிலீஸ் செய்ய படக்குழு முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

vijay1_cine

இந்த படத்தை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது அடுத்த படத்தில் இணைய இருக்கிறார். மேலும் இந்த படத்தின் வேலைகளில் லோகேஷ் இறங்கி விட்டதாகவும் தெரிகிறது. வாரிசு படத்தை விட லோகேஷ் , விஜய் இணையும் தளபதி- 67 படத்திற்கு தான் ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதையும் படிங்கள் : சிவாஜி கமலுக்கிட்ட சொல்ல சொன்ன விஷயத்தை அதிரடியாக மறுத்த ரஜினிகாந்த்…!

vijay2_cine

ஏனெனில் இவர்கள் ஏற்கெனவே இணைந்த மாஸ்டர் படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து மீண்டும் இணைய இருக்கும் இந்த படத்திற்கும் பெருத்த எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் இந்த படத்தில் நடிகை சமந்தா மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் சமந்தா நடிக்கிறாரா என்ற சந்தேகம் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

vijay3_cine

ஆனால் நடிகை திரிஷா நடிப்பது உறுதி என்று சொல்லப்படுகிறது. மேலும் திரிஷாவில் மார்கெட் குறைந்த நிலையில் ஏற்கெனவே விஜயுடன் நிறைய ஹிட் படங்களை கொடுத்திருப்பதால் விஜயை வைத்து இழந்த மார்கெட்டை திரும்ப பெற்று விடலாம் என்ற எண்ணத்தில் தளபதி-67 படத்தில் தனக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் என விஜயை பிரஷர் பண்ணதாக தெரிகிறது. விஜயும் இந்த படத்தில் நடிகை திரிஷாவையே கமிட் பண்ணிடுங்கள் என லோகேஷிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த செய்தியை வலைப்பேச்சு அந்தனன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top