Trisha: தமிழ் சினிமாவில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை விவரமாக விளையாட தொடங்கி விட்டார் நடிகை த்ரிஷா. அவர் நடிப்பில் உருவாக இருக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் லேசா லேசா, மௌனம் பேசியதே படங்கள் மூலம் நடிகையாக எண்ட்ரி கொடுத்தவர் நடிகை த்ரிஷா. தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் வந்ததை அடுத்து கோலிவுட்டின் கனவுக்கன்னி அந்தஸ்த்தினை பெற்றார்.
தமிழின் முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்து வந்தார். ஆனால் விதி யாரை விட்டது என்ற ரீதியில் நடிகருடன் காதல், தொழிலதிபருடன் நிச்சயத்தார்த்தம் அம்மணி திரை வாழ்க்கைக்கே மிகப்பெரிய பின்னடைவை கொடுத்தது.
இதையும் படிங்க: ஜெயிலர் என்ன? பொன்னியின் செல்வன் ரிக்கார்டையே பிரேக் செஞ்ச லியோ!
அந்த நேரத்தில் நயன் உச்சத்தினை நெருங்கி கொண்டு இருந்தார். அதனால் முன்னணி நடிகர்களின் படங்களும் இல்லை. தனி நாயகியாக நடித்தாலும் எந்த படமும் பெரிய அளவில் ரீச்சாகவே இல்லை. இதனால் மன உளைச்சலில் த்ரிஷா இருந்தாராம்.
அந்த நேரத்தில் பொன்னியின் செல்வன் குந்தவை வாய்ப்பால் வாழ்க்கையே தற்போது மாறி இருக்கிறது. விஜயுடன் இவர் நடிப்பில் வெளியான லியோ மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து கமலை வைத்து மணிரத்னம் இயக்கி வரும் KH234 படத்தின் முன்னணி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இன்று அதிகாரப்பூர்வமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ், ராஜ்கமல் ப்லிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இப்படத்தினை தயாரிக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஓயாத ரெட் கார்ட் சர்ச்சை… மாயாவின் அடுத்த எவிக்சன் ப்ளான்… கமலுக்கு அடுத்த வாரம் எமகண்டம் தான் போல..!
இப்படத்தின் டைட்டில் இன்று மாலை 5 மணிக்கு ரிலீஸாக இருக்கிறது. இப்படத்தில் துல்கர் சல்மான், அபிராமி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கும் தகவலும் அறிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
அறிவிப்பு: https://twitter.com/MadrasTalkies_/status/1721460230482272494