த்ரிஷாவிற்கு ஜோடியான குக் வித் கோமாளி பிரபலம்... எலிமினேட்டான மறுநாளே அடித்த ஜாக்பாட்...!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் அனைவரும் மக்கள் மத்தியில் பிரபலமாக வலம் வருவதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நடைபெற்று வருகிறது. இதில் பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர். அதில் ஒருவர் தான் நடிகர் சந்தோஷ் பிரதாப். இத்தனை வாரங்கள் சிறப்பாக செயல்பட்டு வந்த சந்தோஷ் கடந்த வாரம் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில் வெளியேறிய மறுநாளே அவருக்கு நடிகை த்ரிஷாவுடன் புதிய படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி கடந்த 2000 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு புதிய படம் ஒன்று உருவாக உள்ளதாம்.
இந்த படத்தில் தான் நடிகை த்ரிஷா உடன் இணைந்து சந்தோஷ் பிரதாப் நடிக்க உள்ளார். இவர்கள் தவிர சார்பட்டா பரம்பரை டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
த்ரிஷா தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன், பிருந்தாவின் வெப் தொடர், கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை 2 ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இவை அனைத்தும் ஒவ்வொன்றாக வெளியாக உள்ள நிலையில் தற்போது புதிய படத்தின் சூட்டிங் பூஜையுடன் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.