சமந்தா இல்லைன்னா திரிஷா!..சூழ்நிலையை சாதகமாக்கிய நம் ஜானு!..இனி அட மழை தான்!..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவரின் ஒரு அதிரடியான கம்பேக் ஒட்டுமொத்த சினிமாவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதற்கு காரணம் புஷ்பா படத்தில் இவர் ஆடிய ஆட்டம் தான். அந்த படத்திற்கு பிறகு வரிசையாக படங்கள் குவிந்தன.
சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான யசோதா திரைப்படம் கூட மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கிடையில் இவர் ஒரு தீவிர சரும நோயால் அவதிப்பட்டு வருவதாக அவரே சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் நடிப்பிற்கு கொஞ்சம் பிரேக் எடுத்திருக்கிறார் நடிகை சமந்தா. இதன் மூலம் இவர் கமிட் ஆகியிருந்த படங்களின் நிலைமை கேள்விக்குறியாகி நிற்கின்றன.
இந்த சூழ்நிலையை தனக்கு சாதகமாக்கி இருக்கிறார் நடிகை திரிஷா. இவரும் முன்னனி நடிகையாக இருந்து நயன்தாரா,சமந்தா இவர்களின் ஆதிக்கத்தினால் திரிஷாவிற்கு படங்களின் வாய்ப்பு சரிய தொடங்கியது. ஒரு பக்கம் நயன் திருமணமாகி செட்டில் ஆகிவிட மறுபக்கம் சமந்தாவின் உடல்நிலை இவற்றால் திரிஷாவிற்கு நல்ல வாய்ப்பை கொடுத்திருக்கிறது. பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆட தொடங்கியிருக்கிறார் திரிஷா.
அதனையடுத்து விஜய் மற்றும் அஜித் நடிப்பில் வரவிருக்கும் படங்களிலும் திரிஷா கமிட் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பெண்களை மையப்படுத்தி உருவாகும் படங்களில் நடிக்க நயன் மற்றும் சமந்தாவின் இடம் காலியாக இருப்பதால் அதையும் திரிஷாவே கைப்பற்றுவார் என தெரிகிறது.