லியோ படப்பிடிப்பில் இருந்து வெளியேறிய த்ரிஷா!… இதெல்லாம் ஒரு காரணமா சொன்னா எப்படி?
விஜய் நடித்து வரும் “லியோ” திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
லோகேஷ் கனகராஜ் விஜய்யின் 67 ஆவது திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்ற அறிவிப்பு வெளிவந்ததில் இருந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்ற ஆண்டு டிசம்பர் மாதமே தொடங்கிவிட்டது. எனினும் இத்திரைப்படத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு பிப்ரவரி மாதம் வெளிவரும் என்று கூறப்பட்டது. அதன்படி கடந்த வாரம் இத்திரைப்படத்தின் அட்டகாசமான டைட்டில் புரோமோ வெளிவந்தது.
அதே போல் படக்குழுவினரும் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை நடந்துவதற்காக காஷ்மீர் பகுதிக்கு பயணமானார்கள். தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்று வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்பு த்ரிஷா மீண்டும் சென்னை வந்துவிட்டதாக ஒரு புகைப்படம் வெளியானது.
இப்புகைப்படம் வைரலானதை தொடர்ந்து இணையத்தில் “லியோவில் த்ரிஷாவின் கதாப்பாத்திரத்தை கொன்று விடுவார்கள். அதனால்தான் அவரது காட்சிகள் விரைவில் படமாக்கப்பட்டுவிட்டது” என்று பலரும் கிண்டலாக பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் தற்போது இது குறித்து புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது த்ரிஷாவின் காட்சிகள் இன்னும் முழுவதுமாக படமாக்கப்படவில்லையாம். எனினும் காஷ்மீரில் குளிர் அதிகமாக இருப்பதால் அதனை தாங்கிக்கொள்ள முடியாத காரணத்தால் த்ரிஷா சென்னைக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் விரைவில் அவர் காஷ்மீருக்கு திரும்பிவிடுவார் என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பத்திரிக்கை செய்தியை பார்த்து தயாரிப்பாளரிடம் கொந்தளித்த நதியா… அப்படி அதுல என்னதான் இருந்தது?