கோட் படத்தில் 5 நிமிஷம் ஆட்டம் போட இவ்வளவு கோடி சம்பளமா!. திரிஷா இப்பவும் கில்லிதான்!..

TRISHA
Trisha: நடிகை திரிஷா தன்னுடைய கேமியோ ரோலுக்காக கோட் படத்தில் நடித்ததற்கு வாங்கிய சம்பளம் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். படத்தினை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்து இருக்கிறார்.
இதையும் படிங்க: வசூலில் இந்திய அளவில் விஜய்தான் நம்பர் ஒன்.. அட ரஜினி, ஷாருக்கான் கூட இல்லயே!…
இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இருந்தும் படக்குழு அதிக எதிர்பார்ப்பு இல்லாததால் படத்தின் வசூல் பாதிக்கப்படாது என்பதால் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
இருந்தும் படத்தின் டிரைலர் மிகப்பெரிய ஆர்வத்தினை ரசிகர்களிடம் உருவாக்கியது. தொடர்ந்து படக்குழு கொடுத்த பேட்டியும் எக்கசக்கமாக கோட் படத்தின் மீது எதிர்பார்ப்பை உருவாக்கியது. இதையடுத்து, படக்குழு கொடுத்த பேட்டிகளால் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்தனர்.

TRISHA
ஆனால் படம் ரிலீஸாகி கலவையான விமர்சனத்தினையே பெற்றுள்ளது. லியோ படத்தின் முதல்நாள் வசூலை முந்தவில்லை என்றே கூறப்படுகிறது. இப்படத்தில் எகப்பட்ட கேமியோ ரோல்களும் இருப்பதால் படத்திற்கு பெரிய பாப்புலாரிட்டியை கொடுத்தது. முக்கியமாக விஜயின் ஆஸ்தான நாயகியான திரிஷா ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கிறார்.
இதையும் படிங்க: அடுத்து வேட்டையன் வராரு! ரெடியா இருங்க.. ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ ரிலீஸ் தெரியுமா?
அந்த பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்பாடலுக்கு நடிகை திரிஷாவிற்கு 5 கோடி வரை சம்பளமாக கொடுக்கப்பட்டு இருக்கிறதாம். இப்படத்தில் நடித்த முன்னணி நடிகர் பிரசாந்துக்கே 5 கோடி மட்டுமே சம்பளமாக கொடுக்கப்பட்ட நிலையில் 5 நிமிட பாடலுக்கு திரிஷா வாங்கிய சம்பளம் ஆச்சரியத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.