எனக்கு சப்போர்ட் பண்ண அனைவருக்கும் ரொம்ப தேங்க்ஸ்!.. திடீரென போஸ்ட் போட்ட திரிஷா.. ஓ இதுதான் விஷயமா?

நடிகை திரிஷா திடீரென ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் போட்டதும் ரசிகர்கள் இப்போ என்ன புது பிரச்சனை என ஷாக் ஆகி போய் பார்த்தால், 21 வருடங்கள் சினிமாவில் தான் அறிமுகமானதற்காக நன்றி தெரிவித்துள்ளார்.
காலையிலேயே அமீர் ஒரு அறிக்கை வெளியிட்டதும் மீண்டும் சூர்யா குடும்பத்துக்கு எதிராக என்ன வெடிகுண்டை தூக்கிப் போட்டு இருக்கிறார் என திரையுலகமே அதிர்ந்து பார்த்த நிலையில், பயப்படலாம் வேண்டாம் மெளனம் பேசியதே படம் வெளியாகி 21 ஆண்டுகள் ஆகிறது என்றும் தான் இயக்குநராக அறிமுகம் ஆன படத்திற்காக உழைத்த அனைவருக்கும் மனதார நன்றி தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: டவுசர் போட்ட ரசகுல்லா.. சைனிங் உடம்பை காட்டி சூடேத்தும் பூனம் பாஜ்வா…
இந்நிலையில், அந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அழகு தேவதை திரிஷா 21 வருஷங்கள் ஆகியும் அதே அழகுடன் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக நடித்து வரும் நிலையில், தனக்கு இத்தனை ஆண்டுகளாக ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
அமீர், திரிஷா எல்லாம் மெளனம் பேசியதே படத்தை மறக்கவில்லை என்றும் படத்தின் ஹீரோ சூர்யா ஏன் இன்னமும் ஒரு ட்வீட் கூட போடவில்லை என்றும் அமீர் படம் என்பதால் அவாய்டு செய்து விட்டாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: மீண்டும் பிக் பாஸ் பிரபலத்துக்கு சான்ஸ் கொடுத்த அஜித்குமார்!.. அவருக்கு ஈக்வலா செம ஸ்லிம்மாகிட்டாரே!..
சமீபத்தில், மன்சூர் அலி கான் பஞ்சாயத்துக் காரணமாக திரிஷா ட்வீட் போட்டு கண்டனம் தெரிவித்து இருந்தார். திரிஷாவை எதிர்த்து மன்சூர் அலி கான் மான நஷ்ட வழக்குப் போட்டு நீதிமன்றத்தில் திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டார். லியோ படத்தைத் தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் நடித்து வரும் திரிஷா மலையாளத்தில் மோகன்லால் உடன் ராம் மற்றும் டொவினோ தாமஸ் உடன் ஐடென்டிட்டி உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.
🤲🏻❤️🧿
And just like that…..#21years pic.twitter.com/TNDrdpGiZL— Trish (@trishtrashers) December 13, 2023