நடிப்புக்கு முழுக்கு போட்ட திரிஷா!.. கோபத்தில் லண்டனுக்கு கிளம்பிய சம்பவம்.. சீண்டினது யாருனு தெரியுமா?..
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்பொழுது தான் திரிஷாவின் மார்கெட் சூடுபிடித்திருக்கிறது. விண்ணைத்தாண்டி வருவாயா, 96 போன்ற படங்களுக்கு பிறகு சின்னதாக ஒரு இடைவெளி இருந்தது,
அதன் பிறகு பொன்னியின் செல்வன் படம் இவரின் பெருமையை எங்கேயோ கொண்டு சென்று விட்டது. மேலும் விஜய்க்கு ஜோடியாக தளபதி - 67லும் இடம்பிடித்திருப்பது இன்னும் இவரின் மேல் உள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியிருக்கிறது. அடுத்ததாக இன்னும் பல படங்களில் கமிட் ஆகியிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : “இனிமேல் சினிமால நடிக்கக்கூடாது”… பாரதிராஜா படத்தை பார்த்து எம்.ஜி.ஆர் எடுத்த வினோத முடிவு… ஏன் தெரியுமா??
இந்த நிலையில் ஒரு டான்ஸுக்காக சினிமாவே வேண்டாம் என்று முடிவெடுத்த திரிஷாவின் கதை இன்று வைரலாகி வருகின்றது. உத்தமவில்லன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட திரிஷாவுக்கு ஒரு பாடல் காட்சியில் நடன இயக்குனராக பணிபுரிந்தவர் மாஸ்டர் கலா.
அந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் சின்னதாக ஒரு ஸ்டெப் வரவில்லையாம். அந்த பாடல் காட்சியை எடுத்து விட்டால் படப்பிடிப்பு பேக் அப் என்ற நிலைமையில் இருந்ததனால் இந்த ஒரு ஸ்டெப்பால் தாமதமாகி கொண்டிருந்தனராம். அப்போது கடுப்பில் கலா மாஸ்டர் என்ன திரிஷா. இத இப்படி பண்ணு என்று கொஞ்சம் கோபத்தில் கத்திவிட்டாராம்.
உடனே திரிஷா கோபப்பட்டுக் கொண்டு ரூமிற்குள் போய்க் கொண்டு அவ்ளோதான், இனி சினிமாவிலேயே நடிக்க மாட்டேன், சினிமாவே வேண்டாம், என் அப்பா தங்கியிருக்கும் லண்டனுக்கே சென்று விடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதன் பின் திரிஷாவிடம் பக்குவமாக எடுத்துக் கூறி அம்மணி மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். இதை ஒரு பேட்டியின் போது கலா மாஸ்டரே கூறினார்.