நீங்க பேசுனா எனக்கு தான் ஆபத்து...! செட்டில் திரிஷாவை பேசவிடாமல் செய்த மணிரத்னம்...யாரு கூடனு தெரியுமா..?
தமிழ் சினிமாவில் ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு இப்பொழுது தான் திரிஷாவை பழைய ஃபார்மில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு 96 படத்தில் நடித்தார், அதன் பிறகு பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தான் மீண்டும் திரிஷாவை காண இருக்கிறோம்.
பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார் நடிகை திரிஷா. இந்த படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்ததை நடிகர் ஜெயம் ரவி, கார்த்தி மற்றும் திரிஷா பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்கள் : நம்பியார் யாருக்கும் உதவி செய்யமாட்டார்… ஏன் தெரியுமா?
இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் பற்றியும் திரிஷா கூறினார். அவர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், வேலையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு சரியான நடிப்பை வெளிப்படுத்துவார் என்றும் கூறினார்.
மேலும் செட்டில் நானும் ஐஸும் நல்ல ஜாலியாக பேசிக் கொண்டு இருப்போம். இந்த படத்தின் மூலம் எங்கள் நட்பு கூடுதல் பலம் பெற்றது. படப்பிடிப்பு போக ஐஸும் நானும் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் மணி சார் வந்து தயவுசெய்து நீங்கள் நெருங்கி பழகாதீர்கள் என்று கூறுவார். ஏனெனில் பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய காட்சிகளே குந்தவைக்கும் நந்தினிக்கும் இடையே ஏற்படும் மோதல். அதனால் நீங்கள் இருவரும் இந்த மாதிரி நெருங்கி ஜாலியாக பழகினால் அது காட்சியை சில சமயம் கெடுத்துவிடும் என்று கூறுவாராம். இதை திரிஷா கூறினார். இதன் மூலம் எந்த அளவுக்கு படத்தை தத்ரூபமாக செதுக்கியிருக்கிறார் மணிரத்னம் என்று தெரிகிறது.