வொர்க் அவுட் வீடியோ போட்டு ஷாக் கொடுத்த திரிஷா.. என்ன ஒரு டிரான்ஸ்ஃபர்மேஷன்?

by Rohini |
trisha 1
X

trisha 1

தென்னிந்திய சினிமாவில் நம்பர் ஒன் நடிகையாக கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக முத்திரை பதித்து வருபவர் நடிகை திரிஷா. ஆரம்பத்தில் சின்ன ரோலில் நடித்து அதன் பிறகு ஹீரோயினாக இன்றுவரை மக்கள் மத்தியில் ஒரு நிலையான இடம் பிடித்திருக்கிறார். எத்தனையோ புதுமுக நடிகைகள் வந்தாலும் இவருக்கு இருக்கும் கிரேஸ் வேற எந்த நடிகைகளுக்கும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் .

இன்னும் அதே இளமையுடனும் அதே புத்துணர்ச்சியுடன் நீண்ட வருடங்களாக இந்த சினிமா உலகில் தடம் பதித்து வருகிறார் திரிஷா. தற்போது கைவசம் நிறைய படங்களை வைத்திருக்கும் திரிஷா எப்போதுமே பார்ப்பதற்கு இளமையாகவே இருக்கிறார். அதற்கான காரணம் என்ன என்பது இதுவரை யாருக்குமே தெரியாது. ஜோதிகா போன்ற மற்ற நடிகைகள் அவ்வப்போது உடற்பயிற்சி நிலையத்தில் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை போட்டு தங்கள் உடம்பை எப்படி ஆரோக்கியமாக வைக்க வேண்டும் என்பதை சொல்லி வருகின்றனர்.

ஆனால் இதுவரை திரிஷா அந்த மாதிரி வொர்க் அவுட் வீடியோ போட்டதே கிடையாது. ஆனால் இப்போது தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் அவர் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அதை பார்த்ததும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாகிவிட்டது. ஏனெனில் கையில் தான் வளர்க்கும் செல்ல பிராணி உடன் அந்த ஒர்க் அவுட் வீடியோவை செய்து இருக்கிறார் திரிஷா.

அதிலும் படங்களில் பார்ப்பதை விட இந்த வீடியோவில் இன்னும் ஒல்லியாக தெரிகிறார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது திரிஷா நடிப்பில் தக் லைஃப் திரைப்படமும் குட் பேட் அக்லி திரைப்படமும் ரிலீசுக்கு காத்துக் கொண்டிருக்கின்றன. அதுபோக தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார். இன்னும் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி மிகவும் பிஸியான நடிகையாகவே மாறி இருக்கிறார் திரிஷா.

அதுமட்டுமில்லாமல் அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். விஜயுடனான கிசுகிசுவிலும் சிக்கி வருகிறார். விஜய் முதலமைச்சர் என்றால் அடுத்த துணை முதலமைச்சர் திரிஷாதான் என்று நெட்டிசன்கள் இவரை ட்ரோலும் செய்து வருகின்றனர்.

இதோ அந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DHm5pJApL4S/?igsh=ZzZrcmNlYTZqb3J2

Next Story