Trisha Top 5 Movies: தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்று புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடித்து ரசிகர்களை மிகவும் கவர்ந்த டாப் 5 படங்களைப் பற்றித்தான் பார்க்க இருக்கிறோம்.
சம்திங் சம்திங்: ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான காமெடி கலந்து செண்டிமெண்ட்டான திரைப்படம்தான் சம்திங் சம்திங். ஒரு கிராமத்து பெண்ணாக மிகவும் குறும்புத்தனமான பெண்ணாக அழகாக தோன்றியிருப்பார் த்ரிஷா. படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.
இதையும் படிங்க: சிறகடிக்க ஆசை: மீனாவிடம் உதவிக்கு வந்த ஸ்ருதி.. ரவியின் காதலால் கடுப்பில் இருக்கும் முத்து..!
சாமி : விக்ரம் மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம்தான் சாமி. அப்படியே அச்சு அசலாக ஐயங்கார் வீட்டு பெண்ணாக நடித்து ரசிகர்களின் ஒட்டுமொத்த மனதையும் வென்றார். தன் காதலை வெளிப்படுத்தும் விதம் , கணவரிடம் அன்பு காட்டும் விதம் என பார்ப்பவர்களை மிகவும் பொறாமை பட வைத்திருப்பார்.
லேசா லேசா: கல்லூரி பெண்ணாக வலம் வரும் த்ரிஷா இந்தப் படத்தில் எதார்த்தமான நடிப்பால் தன் காதலை மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பார். இந்தப் படம் ரிலீஸான நேரத்தில் இப்படி ஒரு காதலி நமக்கு கிடைக்காதா என்று ஏங்கும் அளவிற்கு உருகி உருகி நடித்திருப்பார் த்ரிஷா.
இதையும் படிங்க: பார்ட் 2-ன்னு சொல்லி பங்கம் பண்ணிய படங்கள்! வேட்டையனை பாலையாவாக மாற்றிய சந்திரமுகி 2வை மறக்க முடியுமா?..
96 : ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு த்ரிஷாவின் நடிப்பில் வெளிவந்த ஒரு அழகான காதல் கதையில் அமைந்த திரைப்படம் தான் 96. விஜய் சேதுபதி இந்த படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். துரதிர்ஷ்டவசமாக வேறொருவரை திருமணம் செய்து கொண்டு வருடம் கழித்து விஜய் சேதுபதியை பார்க்கும் போது த்ரிஷாவின் உணர்வை புரிந்து கொள்ள முடிந்தது.
பொன்னியின் செல்வன்: த்ரிஷாவை ஒரு பேரழகியாக காட்டிய திரைப்படம்தான் பொன்னியின் செல்வன். குந்தவையாகவே அனைவர் மனதிலும் வாழ்ந்தார். இந்தப் படம் த்ரிஷாவின் வாழ்க்கையில் மிகவும் பெருமை சேர்த்த படமாகவும் அமைந்தது. இதனை தொடர்ந்து வெளியான பொன்னியின் செல்வன் 2 படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: பாக்கியலட்சுமி: செழியனுக்கு ஜெனியால் வந்த சிக்கல்… பாக்கியாவிற்கு எதிராக கோபியின் குரூர புத்தி..!
இந்த படங்களை தவிற விண்ணைத்தாண்டி வருவாயா, சர்வம், கில்லி, மங்காத்தா, கிரீடம் என பல படங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
இயக்குனர் லோகேஷ்…
ஐயப்ப பக்தர்களின்…
இசை அமைப்பாளர்,…
தமிழ்த்திரை உலகில்…
Thalapathy 69: விஜய்…