லியோவுக்கு முன்னாடியே கல்லா கட்டுவாரா திரிஷா?.. தி ரோட் திரைப்படத்தின் விமர்சனம் இதோ!..

அக்டோபர் மாதம் விஜய் மாதமாக இருக்கும் என எதிர்பார்த்த ரசிகர்கள் திடீரென திரிஷா மாதமாக மாறிவிட்டதே என அசந்துப் போயுள்ளனர். அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் திரிஷா, ஷபீர் கல்லராக்கல் (டான்ஸிங் ரோஸ்), சந்தோஷ் பிரதாப், எம்.எஸ். பாஸ்கர், வேல ராமமூர்த்தி, மியா ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள தி ரோட் படம் இன்று வெளியாகி உள்ளது.
நாயகி, பரமபதம், ராங்கி படங்களைத் தொடர்ந்து நடிகை திரிஷா மீண்டும் வுமன் சென்றுக் படத்தில் நடித்துள்ள படம் தான் தி ரோட்.
இதையும் படிங்க: வெண்ணக்கட்டி அழக வேறலெவலில் காட்டும் தர்ஷா!.. ஜூமிங் பண்ணி வெறியேத்தும் புள்ளிங்கோ!..
படத்தின் துவக்கத்திலேயே ஒரு முக்கிய சாலையில் செல்லும் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகிறது. அந்த விபத்துக்கு பின்னணியில் ஒரு மர்ம கும்பல் செயல்பட்டு வருவதை படு பயங்கரமாக காட்டுகின்றனர். அதன் பின்னர் நடிகை திரிஷா மீராவாக கணவர் மற்றும் மகனுடன் அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
திரிஷாவின் கணவராக சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார். சந்தோஷ் பிரதாப் மற்றும் அவரது மகன் ட்ரிப் ஒன்றுக்கு செல்ல அப்போதே நமக்கு பயம் தொற்றிக்கொள்கிறது. எதிர்பார்த்த சம்பவம் நடந்து விடக் கூடாது என நினைக்கும் போதே அந்த கோர சம்பவம் நடந்து விடுகிறது. அதை தொடர்ந்து நடிகை திரிஷா சம்பந்தப்பட்ட அந்த இடத்தில் மட்டும் ஏன் பல விபத்துகள் நடக்கிறது என்பதை ஆராய முற்பட அதிர்ச்சிகரமான விஷயம் மற்றும் வில்லன் கேங் பற்றிய கதையை இயக்குநர் மிரட்டலாக சொல்லி படம் பார்க்கும் ரசிகர்களை பயமுறுத்துகிறார்.
இதையும் படிங்க: தொக்கா மாட்டிய பிக்பாஸ் கிளிகள்! அப்போ காதல்தானா? உண்மையை போட்டுடைத்த அம்மா கிளி
தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் பாவரியா கேங் பார்த்தால் ஒரு பயம் வருமே அதே போல சாலைகளில் வாகனங்களில் செல்பவர்களை விபத்தில் சிக்க வைத்து அவர்களிடம் கொள்ளையடிக்கும் கும்பலையும் அதற்கு பின்னால் இருக்கும் மோசமான கேங் குறித்த கதையையும் த்ரில்லர் கலந்து விவரித்துள்ளார் இயக்குநர்.
ஆசிரியராக இருக்கும் டான்ஸிங் ரோஸ் வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்கள், இத்தனை பெரிய கிரைமுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம் என்கிற பல கேள்விகளுக்கு விடையாக இந்த தி ரோட் படம் இருக்கிறது.
நடிகை திரிஷா தன்னந்தனியாகவே தரமான த்ரில்லர் படத்தை தன்னால் கொடுக்க முடியும் என்பதை இந்த முறை தான் அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். விஜய் ரசிகர்களை பகைத்துக் கொண்ட நிலையில், படத்தை பார்க்க பெரிய கூட்டம் வருவதை மிஸ் செய்து விட்டாரே கல்லா கட்டுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
தி ரோடு : பயத்துடன் பயணம்
ரேட்டிங்: 3.25/5.