புதுசா வேலைக்கு வச்சதுக்கு உன்னால என்ன பண்ண முடியுமோ? பண்ணிட்ட.. –ரஜினிக்கு பிபியை ஏற்றிய சமையல்காரர்!
சமையலுக்கு ஆள் வேண்டும் என புதிதாக ஒரு சமையல்காரரை வேலைக்கு வைத்ததால் நடந்த விபரீதங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
தமிழில் பிரபலமான நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் கமர்ஷியல் கதாநாயகர்களில் ரஜினிகாந்திற்கு இணையான ஒரு நட்சத்திரம் இல்லை என்றே கூறலாம். ஜெயிலர் படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
தற்சமயம் பேட்டி ஒன்றில் பேசிய ரஜினிகாந்த் உடல் நலத்தை எப்படி பேணுவது என்பது குறித்து பேசி வந்தார். எந்தெந்த விஷயங்கள் எல்லாம் நமது உடலில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. முக்கியமாக அன்றாட உணவு உடல் ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் பிரச்சனையை பேசி இருந்தார்.
புதிதாக வேலைக்கு வந்த சமையல் ஆள்
ஒருமுறை ஒரு திருமணத்திற்கு சென்ற ரஜினிகாந்தின் மனைவி அங்கு உணவு மிகவும் சுவையாக இருப்பதை பார்த்துள்ளார். உடனே அங்கு சமைத்தவரிடம் எங்கள் வீட்டுக்கு சமையல் வேலைக்கு வருகிறீர்களா? என கேட்டுள்ளார். அந்த நபரும் சரி என சமையல் வேலைக்கு வந்துள்ளார்.
அவர் சமைக்கும் அனைத்து சாப்பாடும் மிகவும் ருசியாக இருந்துள்ளது. ரஜினிக்கும் ஆச்சரியமாக இருந்துள்ளது. உணவு எப்படி இவ்வளவு ருசியாக இருக்கிறது என ஆச்சரியப்பட்டுள்ளார். அதே சமயம் மாதா மாதம் இவர்களது இரத்த அழுத்த அளவும் அதிகரித்துக்கொண்டே வந்துள்ளது. ஏன் அதிகரிக்கிறது என ரஜினிக்கு தெரியவில்லை.
இந்த நிலையில் ரஜினியின் நண்பர் ஒருவர் உணவு உண்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளார். சாப்பாட்டை சாப்பிட்ட அவர் ஏன் சாப்பாட்டில் இவ்வளவு எண்ணெய், உப்பு சேர்க்கிறீர்கள் என கேட்டுள்ளார். அதன் பிறகுதான் ரஜினிக்கு உடலில் ஏன் இரத்த அழுத்தம் அதிகரித்தது என தெரிந்துள்ளது. அதன் பிறகு வேலைக்காரரை மாற்றியுள்ளார்.
இந்த விஷயத்தை ரஜினி அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.