TRP: சன் டிவிக்கு ஈடு கொடுக்கும் விஜய் டிவி… இந்த வாரம் எக்கசக்க மாற்றமா இருக்கே?

TRP: தமிழ் சின்னத்திரை சீரியலில் விஜய் டிவியை நாளுக்கு நாள் சன் டிவி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் இந்த வார டிஆர்பி அப்டேட் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கு சண்டை நடந்து வருகிறது. அந்த வகையில் கடந்த சில மாதங்களாகவே சன் டிவி டாப் இடத்தினை விட்டு கொடுக்காமல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
டாப் 10 வது இடத்தில் விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் இடம்பெற்று இருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே இந்த சீரியல் வரவேற்பை பெற்று வரும் நிலையில் தொடர்ந்து டாப் 10க்குள் இடம் பெற்றுள்ளது. ஒன்பதாவது இடத்தில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இடம்பெற்றுள்ளது.
வரும் வாரங்களில் தொடர்ந்து இந்த சீரியலின் கதை வரும் வாரங்களில் பரபரப்பாக செல்லும் என்பதால் இந்த ரேட்டிங்கில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எட்டாவது இடத்தில் சமீபத்தில் தொடங்கப்பட்ட அய்யனார் துணை சீரியல் இடம்பெற்றுள்ளது.
வித்தியாசமாக கதை கொண்டு இருப்பதால் இந்த சீரியல் தொடர்ந்து முன்னேறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சன் டிவியின் அன்னம் சீரியல் ஏழாவது இடத்தில் இருக்கிறது. ஆரம்பத்தில் விறுவிறுப்பாக சென்றாலும் தற்போது பெரிய பரபரப்பு இல்லாததால் சறுக்கி இருக்கிறது.

ஆறாவது இடத்தில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இடம்பெற இருக்கிறது. தமிழ் சீரியலில் டாப் ஹிட்டடித்த இந்த சீரியல் தற்போது பெரிய எதிர்பார்ப்பை பெறாமல் இருக்கிறது. இதனால் இந்த சீரியலால் டாப்5க்குள் கூட நுழைய முடியவில்லை.
ஐந்தாவது இடத்தில் மருமகள் சீரியலில் இடம்பெற்று இருக்கிறது. பல வாரங்கள் தொடர்ச்சியாக இந்த சீரியல் டாப் ஐந்துக்குள் இருக்கிறது. நான்காவது இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் இருக்கிறது பெரிய அளவில் பரபரப்பான கதைக்களம் இல்லாததால் இதன் டிஆர்பி ரேட்டிங்கிலும் மாற்றமில்லை.
சன் டிவியின் கயல் சீரியல் மூன்றாம் இடத்துக்கு சறுக்கி இருக்கிறது. இரண்டாவது இடத்தில் சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியலும், முதலாம் இடத்தில் சிங்க பெண்ணே சீரியல் இருக்கிறது. அடுத்த வாரம் இந்த பட்டியலில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.