Serials TRP: சின்னத்திரை சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகியிருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது.
பொதுவாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் புகழ்ச்சியை தெரிந்து கொள்ள வாராவாரம் வெளியிடப்படும் டிஆர்பி தான் முடிவு செய்யும். தற்பொழுது ஓடிடி அதிகரித்தாலும் டிவியில் இன்னும் சீரியல்கள் பார்க்கும் ரசிகர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.
அந்த வகையில் சன் டிவி சீரியல்களுக்கு தற்போது கடுமையான போட்டியை விஜய் டிவி தொடர்கள் கொடுத்து வருகிறது. இருந்து சன் டிவி சீரியல்கள் டிஆர்பியில் டாப் மூன்று இடத்தை தொடர்ச்சியாக தக்க வைத்து வருகிறது. அது இந்த வாரமும் மாறாமல் இருப்பது தான் உண்மை.

அதுபோல விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை தொடர் தான் தொடர்ச்சியாக முன்னிலையில் இருந்து வந்தது. தற்போது அதற்கும் வேட்டு வைக்கும் விதமாக இன்னொரு சீரியல் முந்தி சென்று டாப் 5 இடத்தை பிடித்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த வாரத்திற்கான டிஆர்பி அப்டேட்டில் முதலிடத்தை சன் டிவியின் சிங்க பெண்ணே சீரியல் பிடித்திருக்கிறது. அதைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் மூன்று முடிச்சு சீரியல், மூன்றாவது இடத்தில் கயல் சீரியலும், நான்காவது இடத்தில் மருமகள் சீரியலும் இடம்பெற்றுள்ளது.
ஐந்தாவது இடத்தில் விஜய் டிவியின் முதல் சீரியல் ஆக சின்ன மருமகள் தொடர் இடம் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் நடந்த திருமண எபிசோட்கள் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்று இருக்கும் நிலையில் டிஆர்பியில் மிகப்பெரிய மாற்றம் நடந்திருக்கிறது.
Also Read: அம்மாம் பெரிய ‘லேடி சூப்பர் ஸ்டாரே’ வேண்டானு சொல்லும் போது.. அறந்தாங்கி நிஷா எடுத்த திடீர் முடிவு
ஏழாவது இடத்தில் அன்னம் சீரியலும், எட்டாவது இடத்தில் கிளைமாக்ஸ் நோக்கி நகர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலும் இடம்பெற்றுள்ளது. ஒன்பதாவது இடத்தில் சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலும் பத்தாவது இடத்தில் பரபரப்பாக சென்று வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 தொடரும் இடம் பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.