TRP: சன் டிவிக்கு மாஸ் போட்டி… விஜய் டிவியின் திடீர் ருத்ரதாண்டவம்… டிஆர்பி அப்டேட் இங்கே!

by Akhilan |   ( Updated:2025-05-02 08:15:19  )
TRP: சன் டிவிக்கு மாஸ் போட்டி… விஜய் டிவியின் திடீர் ருத்ரதாண்டவம்… டிஆர்பி அப்டேட் இங்கே!
X

TRP: சின்னத்திரையில் இந்த வாரம் எந்த தொடர்கள் எந்த இடத்தை பிடித்து இருக்கும் என்ற டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது.

பொதுவாக பல ஆண்டுகளாகவே டிஆர்பியில் முதல் ஐந்து இடத்தை சன் டிவி தான் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருந்தது. இடையில் விஜய் டிவி நல்ல சீரியல்களை இயக்கி முதலிடத்தை பிடிக்க படாத பாடு பட்டு சில வாரங்கள் முதலிடத்தையும் தக்கவைத்துக் கொண்டது.

இருந்தும் சன் டிவி தொடர்ந்து சீரியல்களை அதிகப்படுத்தி விஜய் டிவியிடம் இருந்து அந்த முதலிடத்தை தற்போது தட்டிப் பறித்து விட்டது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாகவே முதல் ஐந்து இடத்திற்குள் மற்ற எந்த டிவியின் சீரியல்களும் இடம்பெறாமல் சன் டிவி பார்த்துக் கொண்டு வருகிறது.

அந்த வகையில் இந்த வாரம் முதல் இடத்தை பிடித்திருப்பது சன் டிவியின் சிங்க பெண்ணே சீரியல். தற்போது பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியல் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருப்பதால் டிஆர்பியில் முதலிடத்தை தொடர்ச்சியாக தக்க வைத்து கொண்டு வருகிறது.

வித்தியாசமான கதைகளும் இல்லாமல் இருந்தாலும் மூன்று முடிச்சு சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. சைத்ரா ரெட்டி நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல் தொடர்ந்து ஒரே கதைக்களத்தில் பயணம் ஆவதால் நழுவி மூன்றாம் இடம் வந்து இருக்கிறது.

கேப்ரியல்லா மற்றும் ராகுல் ரவி நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் தொடர்ந்து நான்காம் இடத்தில் உள்ளது. கடந்த வாரம் டாப் 5க்குள் வராமல் இருந்த அண்ணன் சீரியல் சமீபத்தில் நடந்த கல்யாண எபிசோட் மூலம் மீண்டும் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.

கடந்த வாரம் ஐந்தாம் இடத்திற்குள் இருந்த சிறகடிக்க ஆசை அறுவையான கதைகளத்தால் நழுவி தற்போது ஆறாம் இடத்திற்கு நகர்ந்து இருக்கிறது. பிரபலமாக இருந்த எதிர்நீச்சல் சீரியலின் இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அந்த சீரியல் ஏழாம் இடம் பிடித்திருக்கிறது.

விஜய் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகி வரும் அய்யனார் துணை சீரியல் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இருப்பதால் எட்டாம் இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. பரபரப்பாக நகர்ந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஒன்பதாம் இடம் பிடித்துள்ளது.

ஜீ தமிழின் ஒற்றை சீரியலாக கார்த்திகை தீபம் பத்தாம் இடத்தில் இருக்கிறது. அடுத்த வாரம் இந்த லிஸ்ட்டில் நிறைய மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story