Connect with us
simbu

Cinema News

சிம்பு-ஐசரி கணேஷ் உச்சக்கட்ட மோதலில் நடந்த பின்னனி சம்பவம்! முதல்ல கட்டைய போட்டது யாருனு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் சிம்பு. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்பொழுதுதான் ஒரு நல்ல கம்பேக் கொடுத்திருக்கிறார். மாநாடு படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தன. படத்தின் வெற்றியும் வசூலும் அவரை வளர்ச்சியின் உச்சத்திற்கே கொண்டு சென்றன.

கையெழுத்தில்லா ஒப்பந்தம்

அதனை அடுத்து வரிசையாக படங்களில் கமிட்டானார் சிம்பு. கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படமும் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை ஐசரி கணேஷ் தயாரித்தார். இந்தப் படத்தில் சிம்புவுடன் இணையும் போதே ஐசரி கணேஷ் தொடர்ந்து தன்னுடைய நிறுவனத்திற்கு மூன்று படங்கள் நடித்துக் கொடுக்குமாறு கேட்டாராம் .அதற்கு சிம்புவும் சம்மதம் சொல்லி இருக்கிறார்.

simbu1

simbu1

ஆனால் அந்தப் படத்திற்குப் பிறகு பத்து தல படத்தை முடித்த கையோடு கமல் புரொடக்ஷனில் சிம்பு நடிக்கப் போவதாக செய்திகள் வெளியானது. இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாகவும் செய்திகள் வெளியானது. இதை அறிந்ததும் ஐசரி கணேஷ் மிகவும் அதிர்ச்சியானார். ஏனெனில் தன்னுடைய நிறுவனத்தை விட்டு இப்பொழுது கமல் தயாரிப்பில் ஒப்பந்தமாகி இருப்பது அவருக்கு சற்று வருத்தத்தை உண்டாக்கி இருக்கிறது.

பெரிய பட்ஜெட்

இதனால் வெடித்த மோதல் தான் இப்போது சிம்புவிற்க்கும் ஐசரி கணேஷிற்க்கும் உச்சகட்ட மோதலில் வந்து நிற்கின்றது. ஆனால் உண்மையில் நடந்தது பத்து தல படத்தை முடித்த கையோடு சிம்பு தான் தேசிங்கு பெரியசாமியை ஐசரி கணேஷ் இடம் அழைத்துக் கொண்டு சென்றாராம். ஆனால் தேசிங்கு பெரியசாமி பெரிய அளவில் பட்ஜெட் சொன்னதால் ஐசரி கணேஷ் தேசிங்கு பெரியசாமியை வேண்டாம் என கூறி இருக்கிறார்.

simbu2

simbu2

அதேசமயம் ஐசரி கணேஷ் ஏற்கனவே பேசியபடி கொரோனா குமாரை எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிம்புவிடம் சொல்லியிருக்கிறார். ஆனால் அந்த படத்தின் இயக்குனரான கோகுல் “நானும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பேன் “எனக் கூற சிம்புவிற்கு உடன்பாடு இல்லையாம். அதனால் அந்தப் படம் அப்படியே நின்று விட்டதாம்.

பட்டியலிடப்பட்ட இயக்குனர்கள்

சரி வேறு ஏதாவது இயக்குநரை நீங்களே சொல்லுங்கள் என சிம்பு கேட்டாராம். ஏ எல் விஜய் , இயக்குனர் கணிதன்,அடங்கமறு இயக்குனர் கார்த்திக் என பல இயக்குனர்களை ஐசரி கணேஷ் சொல்ல சிம்புவிற்கு யாரையும் ஒப்பந்தம் செய்ய விருப்பம் இல்லையாம். மேலும் அடங்கமறு இயக்குனர் கார்த்திக் “நான் சிம்புவிற்கு ஏற்ற மாதிரி கதை ரெடி பண்ண வேண்டுமானால் அதற்கு ஆறு மாத காலம் தேவைப்படும் “எனக் கூற அந்த கேப்பில் தான் சிம்பு கமலுடன் இணைந்து இருக்கிறார்.

simbu3

simbu3

இதன் காரணமாகத்தான் முதலில் ஐசரி கணேஷ் சிம்புவின் மீது புகாரை அளித்திருக்கிறார். இது படிப்படியாக வளர்ந்து இன்று ஒரு பெரிய மோதலாக வெடித்துள்ளது. லண்டனில் இருந்து திரும்பிய சிம்பு இன்று தான் சென்னைக்கு வந்திருக்கிறாராம். கூடிய சீக்கிரம் இந்த பிரச்சினையை முடித்துக் கொடுப்பார் என்று கோடம்பாக்கத்தில் பேசி வருகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top