தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரை இந்த அளவுக்கு அசுர வளர்ச்சிக்கு கொண்டு வந்ததே அவரது தந்தையான எஸ்.ஏ.சி தான். முதலில் நடிக்க வாய்ப்பு வந்த போது வேண்டாம் என நினைத்த அவரது தந்தை அதன் பின் ‘ நாளைய தீர்ப்பு’ படத்தில் அறிமுகப்படுத்தினார்.
அந்தப் படத்தில் சிறு வயதே ஆனாலும் நன்றாக நடிக்கிறார் என்பதற்காக தொடர்ந்து படங்களில் நடிக்க அனுமதி வழங்கினார் எஸ்.ஏ.சி. அவரின் இயக்கத்திலேயே மாணவர், ரசிகன் போன்ற படங்களில் ஒரு நடிகராக அறிமுகப்படுத்தினார். இருந்தாலும் அந்தப் படங்களின் மூலம் நிறைய விமர்சனத்திற்குள்ளானார் எஸ்.ஏ.சி.
அதன் பின் தன் மகனை குடும்பங்கள் விரும்பும் நடிகனாக உருவாக்க வேண்டும் என்பதற்காக பல இயக்குனர்களிடம் விஜய்க்காக வாய்ப்பு கேட்டு அலைந்தார். அதன் விளைவாக அமைந்த படம்தான் பூவெல்லாம் உனக்காக திரைப்படம். அந்தப் படம் விஜய்க்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. அதனை தொடர்ந்து காதலுக்கு மரியாதை போன்ற படங்களில் நடித்து வந்தார்.
திடீரென ஆக்ஷன் ஹீரோவாக மாற்ற வெங்கடேஷிடம் பகவதி படத்திற்காக எஸ்.ஏ.சி கேட்டார். விஜய் நடித்த முதல் ஆக்ஷன் படம் இதுதான். இந்தப் படமும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படி விஜயை கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கியவர் அவரது தந்தைதான். ஒரு கட்டத்தில் தன் மகனை மிகப்பெரிய இடத்தில் வைத்து பார்க்க வேண்டும் என்று அந்த தகப்பனும் ஆசைப்படுவது உண்டு. அதே போல் தான் விஜயையும் முதலமைச்சர் நாற்காலியில் அமரவைக்க வேண்டும் என ஆசைப்பட்டார் எஸ்.ஏ.சி
ஆனால் அந்த நேரத்தில் அரசியலில் அவ்ளோ ஆசையில்லாத விஜய்க்கு இதிலிருந்து சற்று ஒதுங்கியே இருந்தார். சில நேரங்களில் விஜய்க்கு தெரியாமலேயே அவரது ரசிகர் மன்றங்களை அரசியல் பக்கம் இழுத்தார் எஸ்.ஏ.சி. அதன் பிறகு இருவருக்கும் பிரச்சினையே ஏற்பட்டது. விலகினார்கள். இதுவரைக்கும் இருவரும் பேசுவதில்லை.
ஆனால் எஸ்.ஏ.சி எந்த காரணத்திற்காக ரசிகர் மன்றங்களை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தினாரோ அதே வேளையைத்தான் இன்று விஜயும் செய்து வருகிறார். தன் மக்கள் இயக்கம் சார்பாக பல நல்ல உதவிகளை செய்து வருகிறார். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட விஜய் சார்பாக மக்கள் இயக்கம் நிர்வாகிகள் போட்டியிட போகிறார்கள் என்றெல்லாம் பேசிவருகிறார்கள். ஒரு பக்கம் விஜய்க்கும் அந்த ஆசை இருப்பதாகவே தெரிகிறது.
இதன் விளைவாகத்தான் சமீபத்தில் தன் தாய் ஷோபாவை சந்தித்ததும் கூட. ஒரு முத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியின் ஆலோசனை பேரில் தான் தன் பெற்றோரின் 50 வது ஆண்டு திருமண நாள் அன்று தன் தாயை சந்திக்க போனதாக கூறுகிறார்கள். ஏனெனில் அரசியலுக்கு என்று வந்து விட்டால் இப்படி பெற்றோருடன் பேசாமல் இருப்பது பெரும் விமர்சனத்திற்கு ஆளாக்கிவிடும். அதனால் போய் சந்தித்து ஒரு புகைப்படத்தை இணையத்தில் போட்டு விட்டால் அது வைரல் ஆகிவிடும், மேலும் அரசியலுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும் என்று அந்த அதிகாரி சொன்னதின் பேரில் தான் விஜய் போய் சந்தித்தார் என்று பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறினார்.
இதையும் படிங்க : விஜயோட அப்பா 15 லட்சம் ஏமாத்திட்டார்!.. கண்ணீர் விட்டு கதறும் விஜயகாந்த் மேனேஜர்!..
இன்று தமிழ்…
Nagarjuna: நாகர்ஜுனா…
தமிழ் சினிமாவில்…
மாநாடு படம்…
போடா போடி…