கடைசில 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படம் இந்த அம்மணியின் உண்மைக் கதையாம்....! சொல்கிறார் சினிமா பிரபலம்..

by Rohini |
nayan_main_cine
X

நயன்தாராவின் சொந்த படமான காத்து வாக்குல ரெண்டு காதல் படம் விக்னேஷ் சிவன் இயக்க விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா நடிப்பில் வருகிற 28ஆம் தேதி திரைக்கு வரவிருக்கின்றது. இந்த படத்தின் பாடல்கள் படம் வருவதற்கு முன்னே செம ஹிட் ஆனது. அனிருத் இசையமைத்திருந்தார்.

nayan1_cine

டூ டூ பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் முக்கோண காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாக படத்தின் டீசர் வெளியானதில் இருந்து தெரிகிறது.

nayan2_cine

இந்த படத்தின் கதை ஒரு முக்கியமான பிரபலத்தின் உண்மை கதையை வைத்து எடுக்கப்பட்டிருக்கலாம் என நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரெங்கநாதன் தெரிவித்து இருந்தார். அவர் வேறு யாருமில்லை. நடிகை நயன்தாரா தான். ஏற்கெனவே இரண்டு நடிகர்களுடன் காதல் வையப்பட்டு தோல்வியடைந்தவர் நயன்.

nayan3_Cine

பிரபுதேவாவுடன் சேர்ந்து மதம் மாறுவதற்கே தயாராக இருந்தார். அவரின் பெயரை பச்சை குத்திக் கொண்டு திரிந்தார். கடைசியில் பிரபு தேவாவின் மனைவி குறுக்கீட்டால் இந்த காதல் முற்றுப் பெற்றது. ஒருவேளை இந்த சம்பவத்தை மனதில் வைத்துக் கொண்டு கூட விக்னேஷ் சிவன் இந்த படத்தை எடுத்திருக்கலாம் என ரெங்கனாதன் கூறுகிறார்.

Next Story