Connect with us

Cinema News

மஞ்சள் வீரனே என்னாச்சுன்னு தெரியல?.. 2வது படத்துக்கு ரெடியான டிடிஎஃப்.. டைட்டில் என்ன தெரியுமா?..

பைக்கரும் யூடியூபருமான டிடிஎஃப் வாசன் ஏகப்பட்ட இளைஞர்களை ரசிகர்களாக மாற்றியுள்ள நிலையில், ஏகப்பட்ட ஏழரைகளையும் இழுத்து சிக்கலில் சிக்கி வருகிறார். தாறுமாறாக இருசக்கர வாகனங்களை ஓட்டி இளைஞர்கள் மத்தியில் சீன் போட்டு பிரபலம் ஆகியுள்ளார். ஆபத்து ஏற்படுத்தும் வகையில் 150 கி.மீ., மற்றும் 200 கி.மீக்கு மேல் பைக் ஓட்டி வந்த டிடிஎஃப் வாசன் அடிக்கடி காவல்துறையினர் பற்றி அவதூறாக பேசி வந்த நிலையில் பல வழக்குகளில் சிக்கி வந்தார்.

அதிலிருந்து தப்பிக்க செந்தில் செல். அம் இயக்கத்தில் மஞ்சள் வீரன் படத்தில் நடிக்கப் போவதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு அறிவித்தார். அந்த படத்தை ஆரம்பித்து கொஞ்ச நாட்களில் டிடிஎஃப் வாசன் பைக் ஓட்டி சென்ற போது ஏற்பட்ட விபத்து அவருக்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்கியது.

இதையும் படிங்க: விஜய்யே கேட்டாலும் அந்த விஷயத்துக்கு நோ சொல்லிடுவேன்!.. மாஸ் காட்டிய கேபிஒய் பாலா.. நீடிக்குமா?..

மற்றவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் விதமாக பைக் ஓட்டி வருகிறார் என வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், டிடிஎஃப் வாசன் லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டது. சில நாட்கள் சிறைவாசமும் அனுபவித்தார். இந்நிலையில், மீண்டும் சர்ச்சைகளை கிளப்பும் வகையில் காரில் சென்று வீடியோக்களை போட்டு வருகிறார்.

கார் ஓட்டுவதற்கு தடை செய்தால் என்ன பண்ணுவ என்ன அவரது காதலி ஷாலின் ஜோயா கேட்க நடந்து செல்வேன் என்றும், நடந்து செல்வதற்கு தடை விதித்தால், உருண்டு போவேன் என்றும் உருண்டு போவதற்கு தடை விதித்தால் தவழ்ந்து போவேன் என்றும் நக்கலாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ரிலீஸ் தேதிக்கே ஆப்பு!.. ஆடிப்போன வெங்கட்பிரபு!.. கோட் படத்திற்கு வந்த சிக்கல்!..

மஞ்சள் வீரன் படம் எப்போது நிறைவடைந்து வெளியாகும் என்பது தெரியாத நிலையில், அடுத்ததாக கருணாகரன் இயக்கத்தில் டிடிஎஃப் வாசன் நடிக்கும் இரண்டாவது படத்திற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்தப் படத்துக்கு ஐபிஎல் என்கிற அட்டகாசமான டைட்டிலை வைத்துள்ளனர்.

எல்ஐசி டைட்டிலுக்கு எல்ஐசி நிறுவனம் பஞ்சாயத்து செய்தது போல ஐபிஎல் டைட்டிலுக்கு ஐபிஎல் நிறுவனம் என்கிற கேள்வியையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். மேலும், படத்தின் அறிவிப்பு மட்டும்தான் வெளியாகிறது படம் ஏதும் வெளியாகவில்லை என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ‘பாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார்…’ அது தான் இளையராஜா..!

google news
Continue Reading

More in Cinema News

To Top