TTT: இந்த பொங்கலு ஜீவாக்குதான்!.. தலைவர் தம்பி தலைமையில் வசூல் அப்டேட்!…

Published on: January 24, 2026
ttt
---Advertisement---

கடந்த பல வருடங்களாகவே சினிமாவில் நடித்து வருபவர் ஜீவா. இப்போதுள்ள ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் ஆகியோருக்கெல்லாம் சீனியர் இவர். ஆனாலும் கடந்த பல வருடங்களாக இவருக்கு வெற்றிப் படங்கள் அமையவில்லை. இவரும் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு பல திரைப்படங்களில் நடித்துப் பார்த்தாலும் வெற்றி கிடைக்கவில்லை. இடையில் பிளாக் படம் மட்டுமே வரவேற்பை பெற்றது. எனவே ஒரு நல்ல வெற்றிக்காக காத்திருந்தார் ஜீவா.

இந்நிலையில்தான் பொங்கலுக்கு விஜயின் ஜனநாயகன் வெளியாகவில்லை.. அதோடு வெளியான பராசக்தி, வா வாத்தியார் போன்ற படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. அந்த நிலையில்தான் கடந்த 15ம் தேதி ஜீவாவின் நடிப்பில் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் வெளியானது.

திருமணம் நடக்கும் ஒரு வீட்டில் அருகிலேயே ஒரு சாவு விழுகிறது.. அதனால் பிரச்சனை வருகிறது.. இதை ஜீவா எப்படி சமாளித்தார் என்பதுதான் படத்தின் கதை.. சுவாரசியமான திரைக்கதை மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளனர்.

இந்நிலையில், படம் வெளியாகி ஒன்பது நாட்களில் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் இந்தியாவில் 20.84 கோடி வசூல் செய்திருப்பதாகவும், உலக அளவில் இந்த படம் 26.10 கோடி வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் இந்தியாவில் 50 கோடியும், வா வாத்தியார் 9 கோடியும் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.