முதல் பாகமே சூப்பர் பிளாப்.. அதுக்குள்ள 2ம் பாகமா?. ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி...

by சிவா |   ( Updated:2021-10-01 08:02:38  )
vijay-sethupathi
X

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருப்பவர் விஜய் சேதுபதி. அலட்டிக்கொள்ளாத தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றிகளை கொடுப்பவர். எனவே, மிகவும் அதிகமான திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் நடிகராக அவர் மாறியுள்ளார்.

vijay-sethu

vijay sethu

ஒருபக்கம் சன் டிவியில் மாஸ்டர் செஃப் என்கிற தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் அவர் நடத்தி வருகிறார். சினிமா, டிவி, ஓடிடிக்கான படங்கள், வெப் சீரியஸ், தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிப்படங்களில் நடிப்பது என எங்கு பார்த்தாலும் அவர் இருக்கிறார்.

vijay-sethupathi

சில வருடங்களுக்கு முன்பு வரை அவர் நடிக்கும் திரைப்படங்கள் ரசிகர்களை கவரும் படி இருக்கும். ஆனால், தற்போது அப்படி இல்லை. கடந்த சில நாட்களில் மட்டும் அவரது நடிப்பில் லாபம், துக்ளக் தர்பார் மற்றும் அனபெல் சேதுபதி என 3 திரைப்படங்கள் வெளியாகியது.

vijay sethpathi

இதில், லாபம் மட்டுமே தியேட்டரில் வெளியானது. துக்ளக் தர்பார் நேரிடையாக சன் டிவியிலும், அனபெல் சேதுபதி ஓடிடியிலும் வெளியானது. ஆனால், அப்படங்கள் ரசிகர்களை கவரவில்லை.

vijay-sethu4

இந்நிலையில், துக்ளக் தர்பார் படத்தின் 2ம் பாகம் வெளியாகவுள்ளது என அப்படத்தின் இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் கூறி வயிற்றில் புளியை கரைத்துள்ளார். மேலும், இப்படத்தில் முதலமைச்சராக சத்தியராஜும், சாதாரண அரசியல்வாதியாக விஜய் சேதுபதியும் நடிக்கவுள்ளனர். அவர்கள் இருவருக்கும் இடையே நடக்கும் சம்பவங்களே கதை எனவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஆர்.ஜே.பாலாஜி தொட்டுப் பார்க்க துடித்த அந்த நடிகர்….சொன்னா நம்ப மாட்டீங்க!…

இதையடுத்து, முதல் பாகமே விளங்கல.. அதுக்குள்ள ரெண்டாம் பாகமா என சிரிக்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்..

Next Story