
Cinema News
அசிங்கப்பட்டேன்…அதனால் வெளியேறினேன்….உண்மையை உடைத்த சீரியல் நடிகர்….
வெள்ளித்திரை நடிகர்கள் போலவே சின்னத்திரை நடிகர்களுக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரம் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் சில சீரியல் நடிகர்கள் சினிமா நடிகர்களை விட மக்களிடம் புகழடைந்து வருகின்றனர்.
அதனால்தான், சினிமாவில் வாய்ப்பை இழந்தவர்கள் மற்றும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் சின்னத்திரை பக்கம் ஒதுங்குகிறார்கள். இதில், சில நடிகர்களை தங்களின் மகனாக, மகளாக பாவிக்கும் தாய்மார்கள் கூட இங்கே பலரும் இருக்கின்றனர்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெட்டி ஒலி, சித்தி 2, ரோஜா, பாண்டவர் இல்லம் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சில சீரியல்கள் அதிக டி.ஆர்.பி. கொண்டதாக இருக்கிறது. அதாவது, இந்த சீரியல்களை அதிகம் பேர் பார்க்கின்றனர்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் அஸ்வினாக நடித்தவர் நடிகர் வெங்கட். அந்த சீரியல் மூலம் அதிக ரசிகர்களை பெற்றவர். அதேபோல், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரிலும் ஜீவா என்கிற கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ரோஜா சீரியலில் இருந்து வெளியேறுவதாகவும், இனிமேல் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவாக உங்களை சந்திப்பேன் எனவும் வெங்கட் அறிவித்தார். இது அந்த தொடரை பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. தற்போது அதற்கான காரணத்தை வெங்கட் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : மின்னல் வேகத்தில் வளர்ந்து தொடர் தோல்வி: ஆனாலும் ஒரு நாளைக்கு 1 கோடி கேட்டு அடம் பிடிக்கும் நடிகர்!
ரோஜா சீரியலில் இருந்து விலகியது என்னுடைய தனிப்பட்ட முடிவுதான். கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஞ்சியோபோம் வரைக்கும் சென்றேன். 25 நாட்கள் என்னை தனிமைப்படுத்துக்கொண்டேன். ஆனால், அதன்பின் படாத பாடு பட்டேன். படிக்கெட் ஏறினாலே மூஞ்சி வாங்கியது.
நிறைய மருத்துவர்களை பார்த்தேன். இது கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு வரும் நோய் என தெரிவித்தனர். எனவே, 2 சீரியல்களில் நடிப்பது சிரமமாக இருந்தது. இதனால் ரோஜா சீரியலில் நான் நடிக்கும் காட்சிகள் குறைவாக மாற வாய்ப்பு இருந்தது. இது முதல் காரணம்.
அடுத்து, நான் விஜய் டிவியில் நடித்து வந்தது சிலருக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். எனவே, புரமோ வீடியோவில் நான் இருக்க மாட்டேன். ரோஜா சீரியல் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில் ரசிகர்கள் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா’ என கத்தினர். அந்நிகழ்ச்சியில் நான் பாட்டு பாடினேன். நடனம் ஆடினேன்.
ஆனால், அது ஒளிபரப்பப்படவில்லை. நல்ல நல்ல விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால், நடிக்க முடியவில்லை. எனவே, இதற்கு மேல் இந்த சீரியலில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்தே வெளியேறினேன்’ என அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, உங்கள் பக்கம் நாங்கள் இருப்போம். உடல் நலத்தை பாருங்கள். உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம். ஜீவாவாக மட்டும் நடியுங்கள் என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.