இதுக்கு மட்டும் கத்துதா அந்த பல்லி…அரசியல் கட்சி தலைவராக விஜய் போட்ட முதல் ட்வீட்!...
Vijay: அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய் முதல் முறையாக கட்சித் தலைவராக ஒரு ட்வீட்டைப் போட அது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கோலிவுட்டின் மாஸ் ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய். அரசியலில் இணையப் போகிறார் என ஒரு தகவல் பல மாதங்களாக உலா வந்தது. அதை உறுதிப்படுத்தும் வகையில் கடந்த மாதம் அவர் தன்னுடைய கட்சி அறிவிப்பை வெளியிட்டார். அவருடைய கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயர் வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவரும் மிரட்டலான 7 படங்கள்!… ஹீரோவா ஹிட் கொடுப்பாரா!..
இந்த வருடம் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒப்புக்கொண்ட திரைப்படங்களை முடித்து விட்ட பின் முழுமையான அரசியல் பணியில் ஈடுபடுவேன் எனவும் குறிப்பிட்டு இருந்தார். அதைத்தொடர்ந்து அவரிடம் இருந்து கட்சி அறிவிப்புகள் மட்டுமே வெளிவந்தது.
சமீபத்தில் திரிஷா குறித்து கிளம்பிய சர்ச்சைக்கு கூட வாய் திறக்காமல் இருந்து வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தற்போது ஒரு ட்வீட்டை போட்டு இருக்கிறார். அந்த ட்வீட்டில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் எனத் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: கோபத்தில் கங்கை அமரன் என்னை பழிவாங்கினார்!.. டைம் பாத்து அடிச்ச கவிஞர் வாலி!..
அதிலும், தன்னுடைய கட்சி பதவியை போட்டு இருந்த நிலையில் அடிக்கடி நியாபகப்படுத்திக்கிட்டு இருக்காரோ என ரசிகர்கள் பலர் கலாய்க்க தொடங்கி இருக்கின்றனர். இது அரசியல் தலைவராக விஜய்யின் முதல் பொதுப்பதிவு என்பதும் குறிப்பிடத்தக்கது.