Connect with us
vijay

Cinema News

Vijay: ‘அண்ணே அது கண்ணாடி’… மருத்துவர் விஷயத்தில் பொங்கிய விஜயை கலாய்க்கும் நெட்டிசன்கள்!

Actor vijay: தவெக தலைவர் நாளொரு அறிக்கையும் பொழுதொரு புகாருமாக ட்விட்டரில் கட்சியை பாடுபட்டு வளர்த்து வருகிறார். அவரின் வழியில் கட்சியின் தொண்டர்களும் செயலாளர்களும் ஏகப்பட்ட அலப்பறைகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று சென்னை அரசு மருத்துவமனையில் நோயாளியின் மகன் அங்கிருந்த மருத்துவரை குத்திவிட்டு தப்பி செல்லும் காட்சிகள் வெளியாகி வைரலாகின. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என தெரியாமல் எமோஷனலாக அந்த அம்மா-மகனுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர்.

இதையும் படிங்க: Kanguva: சிவா Unfit ஆ… கங்குவா ரிலீஸ் தேதியில் மோசமான திட்டம்… அடி வாங்கிய ஞானவேல்ராஜா…

இதற்கிடையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் இந்த சம்பவம் குறித்து, ‘தமிழ்நாட்டில் பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள் சட்டம் ஒழுங்கின் சீர்கேட்டையே காட்டுகிறது என்று எங்கள் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் வாயிலாகக் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது என்பது தினம் தினம் நிகழும் குற்றச் செயல்களால் நிரூபணமாகிறது.

சென்னை கிண்டியில் உள்ள உயர் சிறப்பு அரசு மருத்துவமனையில், புற்றுநோய் மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள் இன்று கத்தியால் குத்தப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிர்காக்கும் சிகிச்சை அளிக்கும் இது போன்ற அரசு உயர் சிறப்பு மருத்துவமனையில், அரசு மருத்துவரின் உயிருக்கே பாதுகாப்பில்லாத நிலை ஏற்பட்டு இருப்பதற்குத் தமிழக அரசின் மெத்தனப் போக்கே காரணம். கத்திக் குத்தில் படுகாயம் அடைந்த மருத்துவர் திரு. பாலாஜி அவர்கள், விரைவில் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்.

காலம் நேரம் பார்க்காது கடுமையாக உழைக்கும் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும்.

vijay

vijay

தமிழ்நாட்டில் தினந்தோறும் நிகழும் பல்வேறு குற்ற நிகழ்வுகள், பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளன. சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் இனியாவது விழித்துக்கொண்டு மக்களைப் பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்,’ என நீண்ட அறிக்கை வெளியிட்டார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் போக்கிரி படத்தில் மருத்துவரை விஜய் கத்தியால் மிரட்டும் காட்சியை சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிர்ந்து, ‘அது கண்ணாடி பாஸ்’ என கிண்டலடித்து வருகின்றனர். இதுபோன்ற செயல்கள் நடப்பதற்கு காரணமே ஹீரோயிசம் காட்டும் உங்களை போன்ற நடிகர்கள்தான்’ என சிலர் பதிவிட்டு வருகிறார்கள்…

 

google news
Continue Reading

More in Cinema News

To Top