தவெக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்றது. அதில், பூத் ஏஜெண்ட் என சொல்லப்படும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் விஜய் மிகவும் ஆவேசமாக பேசினார்.
மக்கள் அழுத்தத்தில் இருக்கிறார்கள். அழுத்தம் என்றால் நமக்கு அழுத்தம் என நினைக்க வேண்டாம். அழுத்தம் இருக்கிறது. ஆனால், இந்த அழுத்தத்துக்கெல்லாம் பயப்படுபவனா நான்?. என் முகத்தை பார்த்தால் அப்படியா இருக்கிறது?.. தீய சக்தி, ஊழல் சக்தி இரண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.. எந்த சதி, அழுத்தத்திற்கும் அடிபணிய மாட்டேன்.. ஊழல் செய்ய மாட்டேன். செய்ய விட மாட்டேன்.. முந்தைய ஆட்சிகள் செய்த தவறுகளை செய்யமாட்டேன்.
இது என்ன சினிமாவா? முதல்வன் படமா?.. ஒரே நாளில் விஜய் எல்லாவற்றையும் மாற்றிவிடுவாரா என கேட்கிறார்கள்.. நடைமுறையில் அது சாத்தியமில்லை என்றாலும் அது ஒரு ப்ராசஸ். அதிமுக நேரடியாக பாஜகவிடம் சரண்டர் என்றால் திமுக மறைமுகமாக சரண்டர். எல்லாமே ஒன்றுதான். இரண்டுமே ஊழல் கட்சிதான்.
அண்டி பிழைப்பதற்கும் அடிமையாக இருப்பதற்கும் நான் அரசியலுக்கு வரவில்லை.. தப்பு செய்தால் யாராக இருந்தாலும் தப்பிக்கவே முடியாது என்ற பயம் இருக்க வேண்டும்.. தயவு செய்து எல்லோரும் ஒற்றுமையாக இருந்து களப்பணி ஆற்றுங்கள்.. யாருக்காகவும் எதற்காகவும் நம் அரசியலை சமரசம் செய்து கொள்ளக் கூடாது.
கட்சி எல்லாவற்றையும் தாண்டி மக்கள் நம்முடன் இருக்க முடிவெடுத்து விட்டனர்.. ஆளும் கட்சியினருக்கு தேர்தல் பூத் என்றால் கள்ள ஓட்டு போடும் இடம்.. தீயசக்தி நீங்கள் முழித்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்விழியை தோண்டிவிடுவார்கள். எச்சரிக்கையாக இருங்கள். நடைபெறவுள்ள தேர்தல் ஒரு ஜனநாயகப் போர்.. அதில் வேலை செய்யக்கூடிய நீங்கள்தான் முன்னணி களவீரர்கள்.
இந்த மூன்று மாதத்தில் நீங்க செய்யும் களப்பணியில்தான் நம் வெற்றி உள்ளது.. நட்புக்கு யாரும் வரவில்லை என்றால் தனித்து நின்று வெற்றி பெறுவோம்’ என்று பேசியிருக்கிறார்.
