ஆரம்பமே அமர்க்களமா இருக்கே… மேடையில் உளறிய தவெக தலைவர் விஜய்… இதெல்லாம் தேவையா?

Vijay
TVK Vijay: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய முதல் பொது கூட்டத்தினை நடத்தி இருக்கும் நிலையில், விவாகாரமாக மீண்டும் சிக்கி இருக்கும் தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
பொதுவாக கேரியர் காலியாகி விட்டால் தான் பிரபலங்கள் அரசியலுக்கு வருவது வழக்கம். எம்ஜிஆரை போல தன்னுடைய சினிமா வாழ்க்கையின் உச்சத்தில் இருக்கும் போது அரசியல் பிரவேசம் செய்ய இருக்கிறார் விஜய். இவர் தன்னுடைய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி ஒரு ஆண்டு முடிந்துவிட்டது.
அடுத்தாண்டு தமிழகத்தின் பொது தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் கட்சி வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. தற்போது இக்கட்சியின் முதல் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் திருவான்மியூரில் நடந்து வருகிறது. இதில் தலைவர் விஜய் பேசி இருந்தார்.
அவர் கூறுகையில், அரசியல் என்றால் என்ன எல்லா குடும்பமும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறது. இங்க ஒரு குடும்பம் மட்டும் நல்லா இருக்கணும் நினைக்கிறது அரசியலா? நமக்கு எதிராக இவர்கள் செய்வது ஒன்றா? இரண்டா?
புத்தக விழா, பரனூர் பயணம், மாநில மாநாடு என எல்லா சமயமும் தொல்லை கொடுத்தார்கள். இங்க என்ன அதிமுகாவா ஆளுது. பேரை சொல்லலைனு சொல்லிக்கிட்டு. மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே. பெயரை மட்டும் கம்பீரமாக சொன்னால் பத்தாது.

அதை ஆட்சியிலும் காட்ட வேண்டும். பாஜகவை பாசிச ஆட்சி என நீங்கள் அறை கூவல் விடுத்துவிட்டு நீங்களும் அதுக்கு குறை இல்லாத அதே பாசிச ஆட்சி தான் இங்கு செய்து கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்காக இல்லை சட்டத்திற்காக அமைதியாக இருக்கிறேன்.
இப்போது வந்தவனுக்கு முதல்வர் பதவி ஆசையா எனக் கேட்கிறீர்கள். அப்புறம் எதற்கு தவெக கட்சிக்கு தொடர்ந்து தொல்லை தருகிறீர்கள். இன்னும் தொடர்ந்து மத்திய, மாநில அரசினை நேரடியாக தாக்கி பேசி இருந்தார். இந்நிலையில் இந்த பேச்சில் மென் மே கம், மென் மே கோ, பட் இ கோ ஆன் ஃபாரெவர் எனக் ஒரு கவிதை குறிப்பிட்டார்.
இதை உண்மையில் எழுதியவர் அல்பிரட் லார்ட் டென்னிசன். ஆனால் விஜய் வில்லியம் பிளேக் என மாற்றி கூறினார். அரசியல் தலைவர்கள் தான் அடிக்கடி இப்படி உளறுவார்கள் என்றால் தற்போது விஜயும் இந்த லிஸ்ட்டில் இணைந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.