TVKVijay: இப்படை தோற்கின் எப்படை வெல்லும்....! விமர்சித்த வாய்களை ஒரே நாளில் அடக்கிய TVK தலைவர் விஜய்…

by Akhilan |   ( Updated:2025-04-27 07:01:05  )
TVKVijay: இப்படை தோற்கின் எப்படை வெல்லும்....! விமர்சித்த வாய்களை ஒரே நாளில் அடக்கிய TVK தலைவர் விஜய்…
X

TVKVijay: தமிழ் சினிமாவில் இருந்து தற்போது அரசியல் பிரவேசமாகி இருக்கும் விஜய் நாளுக்கு நாள் தன்னுடைய பிரபலத்தை மக்கள் மத்தியில் பெற்று வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாக ஒரு நடிகர் சினிமாவிற்கு செல்லும்போது அவருக்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் வாக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எப்போதுமே பலருக்கு எழுந்து விடும். எம்ஜிஆர் தொடங்கி பல நடிகர்கள் சினிமாவில் இருந்த அரசியலுக்கு வந்தாலும் அவருடைய இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை.

விஜயகாந்த் இதைத் தாண்டி அரசியலுக்குள் வந்து ஓரளவு புகழை பெற்றாலும் அவருடைய வெளிப்படையான குணம் தவறாக பேசப்பட்டு அரசியலில் நீடிக்க முடியாத நிலை உருவானது. அவருடைய இறப்பிற்கு பின்னர் தற்போது அவர் குறித்த புகழ் ரசிகர்களிடம் பரவி வருகிறது.

இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு அரசியலுக்குள் குதித்து இருக்கிறார் விஜய். அவருடைய ஒவ்வொரு நகர்வும் பொறுமையாக அடி எடுத்து வைக்கும் விதமாகவே நடந்து வருகிறது. அந்த வகையில் கட்சியின் பெயர் தொடங்கி மாநில மாநாடு வரை எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் ஆரம்பித்தாலும் பிரம்மாண்டமாக மாற்றி வைத்தது அவருடைய ரசிகர்கள் தான்.

பனையூர் பண்ணையார் என அரசியர் விமர்சகர்கள் அவரை கலாய்த்து வந்தனர். முக்கியமான நாளில் மட்டும் அறிக்கை விட்டு அமைதியாக இருக்கும் இவர் எப்படி அரசியலுக்கு செட்டாகுவார் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

ஆனால் அதை சமீபத்திய நாட்களாக தலைவர் விஜய் உடைத்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நிகழ்ச்சியின் ஆண்டு விழா தொடங்கி பொது இடங்களில் அவருடைய பேச்சு பலராலும் ரசிக்கும் படியாக அமைந்திருக்கிறது.

தற்போது கோயம்புத்தூரில் விஜயின் ரோடு ஷோ நடந்து வரும் நிலையில் வெயிலையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கானோர் கூடியிருப்பது அரசியல் அமர்வில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவரால் முடியுமா என்ற கேள்விக்கு பதிலாகவே இது அமைந்திருக்கிறது.

வெயிலின் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் கூட்டம் கூட்டமாக மக்கள் விஜயை காண கூடி வருவது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஆக வெளியாகி பலருக்கு ஆச்சரியத்தையும் சிலருக்கு அதிர்ச்சியும் ஏற்படுத்திய வருவதாக தமிழக வெற்றிக்கழகம் தரப்பில் தகவல்கள் கசிந்து வருகிறது.

Next Story