நெல்சன் சம்பவம் பண்ணிட்டாரு!.. ஜெயிலர் ஃபர்ஸ்ட் ஆப் தெறிக்குது!.. ஃபயர் விடும் ரசிகர்கள்!...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க ரஜினி, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலரும் நடித்து இன்று காலை வெளியாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை ரஜினி ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழ் நாட்டில் மட்டும் இப்படம் முதல் காட்சி இன்று காலை 9 மணிக்கு வெளியாகவுள்ளது. ஆனால், கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் 6 மணிக்கே இப்படம் வெளியானது. எனவே, படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டு பலரும் டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் முதல் பாதி எப்படி இருந்தது என பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஹோட்டல் குருவில் நடிகையுடன் ரூம் போட்ட ரஜினி!… எம்ஜிஆருக்கு வந்ததே கோபம்!.. அப்புறம் தான் சம்பவம்!..
படம் பாட்ஷா போல இருப்பதாகவும், ரஜினியை நெல்சன் சரியாக பயன்படுத்தி இருக்கிறார் எனவும், கண்டிப்பாக இப்படம் ரஜினிக்கு இன்னொரு பாட்ஷா போல ஹிட் அடிக்கும் எனவும் ஒரு பதிவிட்டுள்ளார். அதேபோல், வழக்கமான சினிமாவில் வரும் காட்சிகளாக கொஞ்சம் இருந்தாலும் முதல் பாதி எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை.
சில மாஸ் காட்சிகளும் இருக்கிறது. அதேபோல, சில காமெடி காட்சிகளும் சிரிக்க வைக்கிறது. ரஜினி சூப்பராக இருக்கிறார் என ஒருவர் பதிவிட்டுள்ளார். நெல்சனும் அனிருத்தும் சேர்ந்து படத்தின் முதல் பாதியை தெறிக்க விட்டுள்ளனர். நெல்சன் ரஜினியை வச்சி செமயான சம்பவம் பன்னியிருக்கார் என சிலர் பதிவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ‘சிங்கம் சிங்கிளாத்தான் வரும்’ டையலாக்கெல்லாம் போச்சா? வசனத்தை பேசி மொக்க வாங்கிய ரஜினி
அனிருத் பின்னணி இசை வேறலெவல். அதுவும் ரஜினி அறிமுகமாகும் காட்சிக்கு இசை சிறப்பாக இருக்கிறது. ரஜினி - யோகிபாபு காமெடி காட்சிகள் ரசிக்க வைக்கிறது. பாடல்கள், குடும்ப செண்டிமெண்ட், புதிய திரைக்கதை, இண்டர்வெல் காட்சி என எல்லாமே சிறப்பாக அமைந்துள்ளது. மொத்தத்தில் ஃபர்ஸ்ட் ஆப் தலைவரின் சிறப்பான சம்பவம் என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.