தமிழ் சினிமாவில் பல பேரை அவங்க ரெண்டு பேரும் வாழ வச்சிருக்காங்க.. – பா.விஜய் சொன்ன தகவல்!..
தமிழ் சினிமாவில் 1990 களின் இறுதியில் பல புதிய கவிஞர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள். அதில் கவிஞர் பா.விஜய், நா.முத்துக்குமார், தாமரை பலரும் அடங்குவர்.
இவர்கள் அனைவருமே ஒரே காலக்கட்டத்தில் சினிமாவிற்கு வந்தவர்கள். தற்சமயம் இவர்கள் மூவருமே தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியா இடத்தை பிடித்துவிட்டனர். நா.முத்துக்குமார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் காம்போ போட்டு பல பாடல்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர்.
அதே போல பா.விஜய்யும் பல பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஒரு பேட்டியில் இவர் கூறும்போது ஆரம்பக்காலக்கட்டத்தில் பல கவிஞர்களுக்கு உதவி புரிந்தவர்கள் இயக்குனர் விக்ரமனும், இசையமைப்பாளர் எஸ்.ஏ ராஜ்குமாரும்தான் என கூறியுள்ளார்.
வாய்ப்பு கொடுத்த பிரபலங்கள்:
இவர்கள் இருவருமே பா.விஜய் சினிமாவிற்கு வந்த காலக்கட்டத்தில் சினிமாவில் பெரும் உயரத்தில் இருந்தவர்கள். விக்ரமன் படம் என்றாலே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கும். அதற்கு அதிகமான ஹிட்டை எஸ்.ஏ ராஜ்குமாரின் பாடல்கள் கொடுக்கும். இவ்வளவு உயரத்தில் இருந்தபோதும் அவர்கள் தொடர்ந்து புது பாடகர்களுக்கு வாய்ப்பளித்துள்ளனர்.
சினிமாவிற்கு அறிமுகமானபோது பா.விஜய்க்கும் இவர்கள் வாய்ப்புகள் தந்துள்ளனர். நீ வருவாய் என, வானத்தை போல, உன்னை நினைத்து போன்ற படங்களில் பாடல் வரிகளை எழுதியுள்ளார் பா.விஜய். அப்போதைய காலக்கட்டத்தில் எஸ்.ஏ ராஜ்குமாரின் ஒரு பாடலுக்கு இசையமைத்தால் கூட பிரபலமாகிவிட முடியும்.
அதே போல உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் திரைப்படத்தில்தான் பாடலாசிரியர் தாமரை அறிமுகமானார். எஸ்.ஏ ராஜ்குமார், விக்ரமன் இருவருமே அவர்கள் இருந்த உயரத்திற்கு பிரபலமாக இருக்கும் கவிஞர்களை வைத்து பாடல் வரிகளை எழுதியிருக்கலாம்.
ஆனால் புது கவிஞர்கள் வளர்ந்து வர வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வந்துள்ளனர்.