குடும்பத்துடன் சேர பிக்பாஸ் வைத்து ப்ளான் போடும் வனிதா… ஏலேய் முடில விட்றங்கம்மா… கதறிய ரசிகர்கள்

Biggboss Season 7: தமிழ் டாப் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக கருதப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் களைக்கட்டி இருக்கிறது. இந்த சீசனில் யார் கலந்து கொள்வார்கள் என்ற உத்தேச பட்டியலும் ரசிகர்களை இப்போதே நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்து இருக்கிறது.

பல முன்னணி நட்சத்திரங்களை ஒரே வீட்டில் 60க்கும் அதிகமான கேமரா முன்னிலையில் 100 நாட்களுக்கு மேலாக வாழ வேண்டும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 50 லட்சம் வரை பரிசாக கொடுக்கப்படும். பல மொழிகளில் நடக்கும் இந்த நிகழ்ச்சி தமிழில் 7வது சீசனை எட்டி இருக்கிறது.

இதையும் படிங்க: நாம சும்மா இருந்தாலும் சுழி சும்மா இருக்காது! வேண்டாத வேலையால் ரஜினியிடம் வெறுப்பை சம்பாதிச்ச நடிகர்

தொடர்ச்சியாக பல நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதில் விஜயகுமாரின் இளைய மகளும், நடிகையுமான ஸ்ரீதேவியும் கலந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இவரின் அக்காவும், நடிகையுமான வனிதா இரண்டு சீசன்களில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியின் டிஆர்பியினை அதிகரிக்க அவர் செய்த களேபரங்களை சொல்லி மாளாது. இதில் அவர் குடும்பத்தில் இருந்து ஸ்ரீதேவியா? ஒரு வேளை குடும்ப மானத்தினை வாங்கி சென்றார். நாம போய் அமைதியா இருந்தா? வனிதா மட்டும் தான் அப்படி. அதான் தள்ளி வச்சிருக்காங்களோ என்ற எண்ணத்தில் கூட வரலாம் என கிசுகிசுக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஓவர் சீன் போடும் வேலராமமூர்த்தி… ஆதி குணசேகரனுக்கு வேறு நடிகரை தேடும் சீரியல் குழு… செட்டாகுமா?

ஒருவேளை இருவரும் ஒரே நேரத்தில் நிகழ்ச்சிக்குள் வந்தால் டி.ஆர்.பி பிச்சுக்கும். அதேவேளையில், வெளியில் எபிசோடை விமர்சிக்கும் வனிதாவுக்கு மேலும் பாப்புலரிட்டியும் கிடைக்கும். அப்புடி போடு. ஒரே கல்லுல ரெண்டு மாங்காயா!

 

Related Articles

Next Story