Connect with us
jananayagan

Cinema News

விஜய் படத்துக்கு போட்டியா இரண்டு பெரிய படங்கள்!. ரிட்டயர்டு ஆகும்போது ரிவிட் அடிக்குறாங்களே!…

Jana Nayagan: கோலிவுட்டில் முக்கிய நடிகராக இருப்பவர் விஜய். ரசிகர்கள் இவரை தளபதி என அழைக்கிறார்கள். இவரின் நடிப்பில் வெளியான கோட் படம் கூட தயாரிப்பாளருக்கும், அப்படத்தை வாங்கி வெளியிட்ட வினியோகஸ்தருக்கும் நல்ல லாபத்தை பெற்று தந்தது. இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போதுதான் விரைவில் தான் அரசியலுக்கு வரவிருக்கிறேன் என விஜய் அறிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகம் என்கிற கட்சியை துவங்கி விக்கிரவாண்டியில் மாநாட்டையும் நடத்தி காட்டினார். இந்த மாநாட்டில் விஜய் ரசிகர்கள் சுமார் 8 லட்சம் பேர் கலந்துகொண்டதாக சொல்லப்பட்டது. அதன்பின் தமிழகத்தில் நடக்கும் முக்கிய பிர்ச்சனைகளுக்கு அறிக்கையை மட்டும் வெளியிட்டு வருகிறார் விஜய்.

vijay tvk

vijay tvk

இப்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்தில் நடித்து வருகிறார். அஜித்தை வைத்து துணிவு படத்தை இயக்கிய பின் வினோத் இயக்கும் படம் இது. மேலும், கமலை வைத்து வினோத் ஒரு படம் இயக்குவதாக அறிவிக்கப்பட்ட அது நடக்காமல் போக இப்போது விஜயை வைத்து இயக்கி வருகிறார்.

இந்த படம் தெலுங்கில் பாலையா நடித்து ஹிட் அடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் பிரேமலு படத்தில் நடித்த மமிதா பைஜு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அதோடு, பூஜா ஹெக்டே, பாபி தியோல், கவுதம் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

jananayaagan

#image_title

விஜயின் கடைசிப் படம் என்பதால் ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில், ஜனநாயகன் படம் பொங்கலை முன்னிட்டு 2026 ஜனவரி 9ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

அதேநேரம் சுதாகொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படமும் பொங்கலுக்கு வரவிருக்கிறது. எனவே, விஜய் ரசிகர்கள் எஸ்.கே.வை திட்டி வருகிறார்கள். இந்நிலையில், இந்த படம் மட்டுமில்லாமல் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர் நடித்து வரும் தெலுங்கு படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

parasakthi

இந்த படம் வெளிவந்தால் ஜனநாயகன் படத்திற்கு ஆந்திராவில் அதிக தியேட்டர்கள் கிடைக்காது என சொல்லப்படுகிறது. அதோடு பராசக்தி படமும் தெலுங்கில் வெளியாகும். மேலும், பிரசாந்த் நீல் படமும் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழகத்தில் வெளியாகும். இப்படி 2 பெரிய படங்கள் வருவதால் ஜனநாயகனின் வசூல் பாதிக்கும் என்றும் கருதப்படுகிறது.

google news
Continue Reading

More in Cinema News

To Top