Connect with us
Kamal

Cinema History

கமல் படத்தை வைத்து உருவான 2 ஹாலிவுட் படங்கள்!.. யாருக்காவது தெரியுமா?…

Kamalhaasan: 4 வயதில் இருந்து சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். சினிமாவில் எல்லா துறைகளிலும் தேர்ச்சி பெற்றவர். கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டர் போல சினிமாவில் எல்லா ஏரியாவும் இவருக்கு தெரியும். சின்ன வயதிலிருந்தே கற்ற அனுபவம், திறமைசாலிகளுடன் நட்பு மற்றும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதில் கமலுக்கு இருக்கும் ஆர்வம் என எல்லாம்தான் இதற்கு காரணம்.

சினிமாவில் நடிக்க துவங்கியது முதலே பல மொழி படங்களையும் பார்த்து உலக சினிமாக்களை கற்றுக்கொண்டார். குறிப்பாக ஹாலிவுட்டில் எப்படி படம் எடுக்கிறார்கள்?.. கதையை எப்படி எழுதுகிறார்கள்?. திரைக்கதை எப்படி அமைக்கிறார்கள்?.. புதிய புதிய தொழில்நுட்படங்களை எப்படி அறிமுகம் செய்கிறார்கள்? என எல்லாவற்றையும் தெரிந்துகொண்டார்.

அப்படி தெரிந்துகொண்டு அவற்றை தான் நடிக்கும் படங்களில் பயன்படுத்த துவங்கினார். இதனால்தான் கோலிவுட்டில் மற்ற இயக்குனர்கள் கமலை எப்போதும் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். ஹாலிவுட்டில் எந்த புதிய தொழில்நுட்பம் வந்தால் அதை உடனே கோலிவுட்டுக்கு கொண்டு வந்துவிடுவார்.

குறிப்பாக ஹாலிவுட்டில் பயன்படுத்துப்பட்டு வந்த மேக்கப் கலைகளை இந்தியாவில் முதலில் அறிமுகம் செய்தவர் கமல்தான். இந்தியன், அவ்வை சண்முகி, அன்பே சிவம் உள்ளிட்ட சில படங்களில் அதை செய்து காட்டினார் கமல். இதைத்தான் இப்போது மற்ற இயக்குனர்கள் பின்பற்றி வருகிறார்கள்.

அதேநேரம், கமலின் படங்களை பார்த்து ஹாலிவுட்டில் சில படங்கள் உருவாகியிருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?. உண்மையில் அது நடந்திருக்கிறது. கமல் எழுதி நடித்த ஆளவந்தான் படத்தில் மனிஷா கொய்ராலாவை கமல் கொல்லும் காட்சியை கார்ட்டூன் போல காட்டியிருப்பார் கமல். இதைதான் ஹாலிவுட் ஜாம்பவான் குவண்டின் டோரண்டினோ தனது Kill Bill படத்தில் பயன்படுத்தினார். இதை அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

mahanadhi

#image_title

அதேபோல, கமல் எழுதி நடித்த மகாநதி படத்தில் அவரின் மகள் சிலரை கடத்தி கொண்டு சென்று பாலியல் விடுதியில் விற்று விடுவார்கள். அதை கண்டுபிடித்து மகளை மீட்பார் கமல். இதை வைத்துதான் ஹாலிவுட்டில் Token என்கிற படத்தை எடுத்தார்கள். இது 3 பாகங்களாக வெளிவந்து ஹிட் அடித்தது. இதையும் அந்த இயக்குரும் ஒத்துக்கொண்டார்.

ஹாலிவுட்டிலிருந்து கமல் காப்பி அடித்தார் என பலரும் பேசுகிறார்கள். ஆனால், கமல் செய்த ஒரு விஷயத்தை ஹாலிவுட்டில் முக்கிய இயக்குனர்கள் காப்பி அடித்து படம் எடுத்திருக்கிறார்கள் என்பது பலருக்கும் தெரியாது.

google news
Continue Reading

More in Cinema History

To Top