ரஜினி - கார்த்திக் சுப்பராஜ் காம்போவில் மிஸ்ஸான படங்கள்.. காரணம் இதுதானா?

by Rohini |   ( Updated:2025-04-23 09:50:52  )
rajini_karthick
X

rajini_karthick

Rajini: கார்த்திக் சுப்பராஜ் ரஜினியின் தீவிர ரசிகர் என அனைவருக்கும் தெரியும். ஒரு ஃபேன்பாய் சம்பவமாக ரஜினியை வைத்து பேட்ட திரைப்படத்தை எடுத்தார் கார்த்திக் சுப்பராஜ். அது பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படமாக மாறியது. அதன் பிறகும் ரஜினிக்கு நிறைய கதைகளை சொல்லி இருக்கிறாராம் கார்த்திக் சுப்புராஜ். ஆனால் நிறைய கதைகளை கேட்டு விட்டு ரஜினி இது நான் நடிக்கும் கதையாக இருக்காது, இது எனக்கு செட் ஆகாது என்பது மாதிரி சொல்லிவிட்டாராம் .

ஆனால் கார்த்திக் சுப்பராஜ் எடுத்த இரண்டு திரைப்படங்களை பார்த்து இந்த படங்களை ஏன் என்னிடம் சொல்லவில்லை என கேட்டாராம் ரஜினி .அதாவது விக்ரமை வைத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய திரைப்படம் மகான். அந்த படத்தை பார்த்து ரஜினி கார்த்திக் சுப்பாராஜிடம் இந்த கதை நன்றாக இருக்கிறது ஏன் என்னிடம் சொல்லவில்லை எனக் கேட்டாராம்.

அதேபோல டபுள் எக்ஸ் திரைப்படத்தையும் பார்த்து ரஜினி கேட்டிருக்கிறார். ஆனால் இந்த கதைகளை ஏற்கனவே உங்களிடம் நான் சொல்லி இருக்கிறேன் என கார்த்திக் சுப்பராஜ் கூறினாராம். உடனே ரஜினி ஆனால் இப்படி கதை சொல்லும் போது இல்லையே என கேட்டிருக்கிறார் .அதற்கு ஆம் என சொன்னாராம் கார்த்திக் சுப்பராஜ். அதனால் சொல்லும் போது வேறு மாதிரியாக இருக்கும். படங்களில் பார்க்கும்போது வேறு மாதிரியாக அது வந்து இருக்கும்.

இப்படித்தான் விஜய்க்கும் அவருடைய கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. ஒரு கதையை விஜையிடம் சொன்னேன். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் அந்த கதை விஜய்க்கு கனெக்ட் ஆகவே இல்லை. அதனால் அவருடைய கடைசி படத்தை என்னால் எடுக்க முடியாமல் போனது என கார்த்திக் சுப்பராஜ் கூறினார். அது மட்டுமல்ல சூர்யா இப்போது நடித்திருக்கும் ரெட்ரோ திரைப்படமும் முதலில் ரஜினிக்கு சொன்னது தான்.

ஆனால் கதையில் லவ் சப்ஜெக்ட் எல்லாம் வர அது அப்படியே சூர்யாவுக்கு மாறிவிட்டதாக கார்த்திக் சுப்பராஜ் கூறினார். முதலில் ரெட்ரோ திரைப்படம் முழு ஆக்சன் படமாக தான் இருந்ததாம். அதன் பிறகு தான் இடையில் சென்டிமென்ட் காதல் என கதையை மாற்றி இருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ் .இந்த படம் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வரவிருக்கிறது.

Next Story