ஜீவா படத்திற்கு அடித்துக்கொண்ட இரண்டு தயாரிப்பாளர்கள்... படமோ ப்ளாப்..

by Akhilan |   ( Updated:2022-09-23 08:22:50  )
ஜீவா
X

கோலிவுட்டில் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஜீவா. இவர் நடிப்பில் வெளியான ஒரு படத்திற்கு ஏகப்பட்ட போட்டிகள் இருந்ததாம். இரண்டு தயாரிப்பாளர்களே நாங்க தான் செய்வோன் என அடித்து கொண்ட சம்பவமும் நடந்து இருக்கிறது.

சினிமா குடும்பத்தில் இருந்து வந்தவர் நடிகர் ஜீவா. ஆனாலும், அவரின் நடிப்பு,பட தேர்வு தான் இத்தனை வருடமும் ஜீவாவை நடிப்புலகில் நிலை நிறுத்தி இருக்கிறது. ஆசை ஆசையாய் படம் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் அவருக்கு கிடைத்தது.

இவர் நடிப்பில் வெளியான படம் தான் திருநாள். இப்படத்தை ராம்நாத் இயக்கி இருந்தார். நடிகை நயன்தாராயாக நடித்திருந்தார். படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. கிட்டத்தட்ட ஃபளாப் என்றே சொல்லலாம். ஆனால், இப்படத்தினை தயாரிக்க இரண்டு தயாரிப்பாளர்கள் சண்டையிட்ட சுவாரஸ்ய சம்பவம் நடந்து இருக்கிறது. இதுகுறித்து இயக்குனர் ராம்நாத் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

ஜீவா

அதில், திருநாள் படத்தின் கதையை தயார் செய்து விட்டு தயாரிப்பாளருக்காக பெரிதும் மெனக்கெட்டேன். தொடர்ந்து, வருடங்கள் கழிந்தன. இயக்குனர் அமீரை தொடர்பு கொண்டேன். அவருக்கும் இந்த கதை பிடித்து இருந்தது. பாடல்களும் பிடித்து இருந்தது. எல்லாம் அமைந்த பிறகு, நானே கூப்பிடுகிறேன். நீ அழையவேண்டாம் என்றார். நானும் நம்பி இருந்தேன்.

இதற்காக 6 மாதம் சென்று விட்டது. நான் அவரிடம் ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. நான் வேறு ஒருவரை வைத்து பண்ணட்டுமா எனக் கேட்டேன். அவரும் சரி பண்ணிக்கோ என்றார். நான் நடிகர் ஜெயை ட்ரை செய்தேன். அவராலும் சில காரணங்களால் செய்ய முடியவில்லை.

பின்னர் என் நண்பர் ஒருவரின் அறிவுரையின் பேரில் ஆர்.பி.சவுத்ரியிடம் இப்படத்தின் கதையை கூறினேன். அவருக்கும் பிடித்தது. ஜீவா கொடைக்கானலில் இருக்கிறார். அவர் வந்ததும் நீ இந்த கதையை அவரிடம் சொல்லி ஓகே வாங்கி கொள் என்றார். அப்போதும், நாட்களே சென்றது. ஒரு முடிவும் வரவில்லை. அவர்கள் தரப்பில் இருந்து நாங்களே கூப்பிடுகிறோம். நீங்க அழைய வேண்டாம் என்றனர்.

ஜீவா

மறுபடியும், துவங்கிய இடத்திலே நின்றேன். என் நண்பர் மூலம் தயாரிப்பாளர் செந்திலை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நண்பரிடம், செந்தில் ஆர்.பி.சவுத்ரியிடம் சொன்ன கதை என்றால் வேண்டாம் என்றார். இவரோ அது இல்லை எனக் கூறி என்னை அனுப்பி வைத்தார். என்னிடமோ அந்த கதை இல்லை எனக் கூறிவிட்டேன். நீ அந்த கதையையே சொல்லிவிடு என்றார்.

நான் போனவுடன் என்னிடமும் அதையே கேட்டார். நானும் இல்லை என்றேன். ஆனால், அவருக்கும் ஆர்.பி.சவுத்ரிக்கும் 42 வருட பழக்கம் என்று எனக்கு தெரியவில்லை. கதை கேட்டார். நானும் சொன்னேன். பாதி கதையிலேயே ஜீவாவிடம் கால் செய்து படம் ஒன்று ஓகே வாங்கி விட்டேன். எப்போது எடுக்கலாம் என்றார்.

ஜீவாவும் நாளை 6 மணிக்கு கதை சொல்ல வரும்படி சொல்லி இருந்தார். இதற்கிடையில் எனக்கு இதே கதைக்கு விக்ராந்திடம் ஒரு சந்திப்பு இருந்தது. அவரிடம் கதை சொல்ல சென்றேன். அவரும் முதல் பாகத்தை மட்டும் கேட்டவர். இரண்டாம் பாகத்தை நாளை கேட்கிறேன் எனக் கூறிவிட்டார். இந்த வேளையில், எனது மொபைலுக்கு தொடர்ச்சியாக கால்கள் வந்தன. எடுத்து பார்த்தால், தயாரிப்பாளர் செந்தில் சீக்கிரம் வருமாறு கூறினார்.

இதையும் படிங்க: நீயெல்லாம் எதுக்க நடிக்க வந்த…? ஜீவாவை பாத்து கேட்ட பிரபல நடிகர்..

ஹோட்டலில் சந்தித்து கதையை கூறினேன். கதை ஜீவாவை பெரிதாக கவர்ந்தது. ஒரு கட்டத்தில் எல்லாம் செட்டாகி இருந்தது. ஆனால் அது இரண்டு நாட்கள் கூட நீடிக்கவில்லை. தயாரிப்பாளர் செந்தில் என்னை ஆர்.பி.சவுத்ரியை பார்க்க வர சொன்னார். அதிர்ச்சியில் இருந்த நான், கிளம்பி அவரை பார்க்க சென்றேன். என்னை கண்டவர் ஒரே சந்திப்பில் இவர் என்னிடம் கதை கூறி இருந்தாரே. அந்த கதையை நான் தான் முதலில் கேட்டேன்.

ஜீவா கால்ஷீட்டை தர முடியாது என சவுத்ரி சார் பிடிவாதம் பிடித்தார். இது செந்தில் சாருக்கும் பெரிய இகோ கிளாஸ் ஆகியது. நான் என் தரப்பில் இருந்து உங்களிடம் பதிலே இல்லை. நீங்கள் தான் அழைய வேண்டாம் எனக் கூறினீர்கள். அதனால் தான் அவரிடம் கதை கூறினேன் என்றேன். உடனே ஜீவா கதை நன்றாக இருக்கிறது. நீங்கள் இரண்டாம் பாகத்தை கேட்டு பாருங்கள் என சிபாரிசு செய்தார்.

அதை கேட்ட சவுத்ரிக்கும் கதை பிடித்துப்போனது. இதை தொடர்ந்தே படப்பிடிப்பு நடைபெற்றதாக தெரிவித்து இருக்கிறார். செந்திலே தயாரிக்கட்டும் என சவுத்ரி சாரும் ஒதுங்கி கொண்டதாக கூறி இருக்கிறார். இவ்வளவு போராட்டங்களுக்கு இடையில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ப்ளாப்பாகியது குறிப்பிடத்தக்கது.

Next Story