ஒரே ஆண்டில் இரண்டு வெள்ளி விழாப்படங்கள்... பட்டையைக் கிளப்பிய டாப் ஸ்டார்..!
தமிழ்த்திரை உலகில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் பிரசாந்த். இவரது படங்களில் பாடல்கள் எல்லாமே செம மாஸாக இருக்கும். அஜீத், விஜய் காலகட்டத்திலேயே தனக்கான ஒரு தனிப்பாதையை அமைத்து வெற்றி நடை போட்டவர். இவர் நடிப்பில் வெளியான வெள்ளிவிழா படங்களின் பட்டியலைப் பார்ப்போம்.
ஜீன்ஸ்
1998ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ஜீன்ஸ். இரட்டை வேடத்தில் நடித்து அசத்தினார். ஐஸ்வர்யாராயும் இரட்டை வேடம் தான். இந்தப்படத்தில் பிரசாந்த்தும் டிவின்ஸ் தான். ஐஸ்வர்யாராயும் டிவின்ஸ் தான். அதனால் ஏற்படும் குழப்பம், ரகளை படத்தை ரசிக்க வைத்தன. ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்தார். பாடல்கள் செம மாஸாக இருந்தன. அந்த வகையில் அதிசயம் பாடல் இன்று வரை நம் மனதை ரீங்காரம் செய்கிறது.
இந்தப் பாடலில் ஏ.ஆர்.ரகுமான், வைரமுத்து என இருவரும் தங்கள் பங்கிற்கு போட்டி போட, இயக்குனர் ஷங்கர் கடைசியில் கெத்து காட்டி விட்டார். பாடலில் உலக அதிசயங்கள் எல்லாவற்றையும் அங்கங்கு நேரடியாக சென்றே படம்பிடித்து அசத்தி விட்டார். அது தான் பூவுக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம் பாடல். காதல் படமாக இருந்து பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்த படம் இது. பல திரையரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடியது.
அந்தக் காலகட்டத்திலேயே பாக்ஸ் ஆபீஸில் 20 கோடி கலெக்ஷன் ஆனது. இரட்டை வேடங்களில் இதுதான் பிரசாந்துக்கு முதல் படம். அதுவும் செம மாஸான இரட்டை வேடம். டிவின்ஸ். அற்புதமாக நடித்திருந்தார்.
கண்ணெதிரே தோன்றினாள்
1998ல் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம். பிரசாந்த், சிம்ரன், கரன் உள்பட பலர் நடித்த படம். தேவா இசை அமைத்துள்ளார். காதல் கதை அம்சம் கொண்ட அற்புதமான படம். பாக்ஸ் ஆபீஸில் நல்ல கலெக்ஷன். தேவாவின் காந்தக் குரலில் சலோமியா பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. சந்தா ஓ சந்தா, கனவே கலையாதே, சின்ன சின்ன கிளியே, கொத்தவால் சாவடி என பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட் தான்.
இவை தவிர வைகாசி பொறந்தாச்சு, செம்பருத்தி, ஜோடி என பல படங்கள் பிரசாந்தின் நடிப்பில் சக்கை போடு போட்டன என்பது குறிப்பிடத்தக்கது.